Home>>இலக்கியம்>>“சூல்” புதினம் வாசிப்பு அனுபவம்.
இலக்கியம்நூல்கள்

“சூல்” புதினம் வாசிப்பு அனுபவம்.

சூல் சிறிய வார்த்தை தான், 200 ஆண்டுகாள வாழ்வியலையும் சூலியல் வரலாற்றையும் 500 பக்கங்களில் அடக்கி வைத்திருக்கும் இயற்கையின் ஆகப்பெரும் பதிவு.

ஐயா தமிழ்திரு. சோ தர்மன் அவர்களின் சூல் புதினம்.

1780-1980 வரையிலான ஒரு வரலாற்று பயனம் எனலாம், கதைக்களம் எட்டையபுர செமீன்னுக்கு உட்பட்ட உருலைக்குடி என்ற கிராமத்தை மையமாக கொண்டு நகர்கிறிது.

புதினத்தின் கதாநாயன் என்றால் கம்மாய் தான், இந்த கம்மையன் கரையில் ஐயானார் கோவில் புலியமரத்தடியில் இருந்து தான் கதை ஆரம்மபம் ஆகிறது.

கம்மாய் மழைக்குமுன் மாமரத்து செய்து கம்மாயின் வண்டல் மண்களை வெளியேற்றி ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகளை பரம்பரை பரம்மைரையாக கம்மாயை காத்துவரும் நீல்ப்பாயிச்சி மடைக்குடும்பன் தலைமையில் நடைபடுகிறது. இதில் அந்த கால நீர்மேலான்மையை மிக அழகாக தெளிவாக பதிவு செய்கிறார்.

அப்படி வருசையாக அன்றை அறம் சாரந்த வாழ்வியலையும் உழவு தொழிலையும் பதிவு செய்கிறார்.

தொடக்கத்தில் வரும் முத்துவீரன் பேச்சும் அம்மக்களின் சொல்லாடலும் மிக சுவரசியமாக நகர்த்துகிறது. காகம் ஏன் கழுத்தை சாய்த்து பார்கிறது என்பதற்கு அன்று கூறப்பட்ட பரமசிவன் பார்வதி கதை, அனுமன் முனி க்கு சொல்லப்படும் அனுமன் கதை என சிறுகதை போல சிறப்பாக இருக்கும்.

பறைவைகளுக்கும் உழுவு தொழிலுக்கும் மழைக்கும் மனிதர்களுக்கும் உள்ளத்தொடர்புகள் என சூலியல் சார்ந்த பதிவுகள் யாவும் சிறப்பு.

தாய் கொப்புளாயி, குப்பாண்டி சாமி இருவரும் மண்ணையும் மக்களையும் காக்கும் இயற்க்கையின் பிள்ளையாக பணப்படுகிறார்கள், இருவரின் இறப்புமே மனதை கணக்க வைக்கும்.

பனையேரி எலியன் பிச்சை ஆசாரி, கோனக்கண்ணன், தொடர்ந்து இரண்டு தலைமுறையாக பிள்ளை பேரன் வரை தொடரும் புதையல் ரகசியம் சுவாரசியம்.

மன்னர்ஆட்சிக்கும் பின் ஆங்கிலேய வருகை பின் சுதந்திர இந்தியா இதில் மக்கள் எங்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெகுசிறப்பாக கூறியுள்ளார்.

திரவிட கழகத்தை கிழித்து தொங்க விடுகிறார் அவர்கள் அரசியல் நகர்வு எப்படியானது அது சூழியலுக்கு எதிராக எப்படி பாய்கிறது. சின்னதுரையும், மூக்கனம் திரவிடக்கழகத்தில் வில் இனைந்தபிறகு சுச்சி நாயக்கர் என்னும் ராமசாமியின் வழிக்காட்டுதளில், எப்படி எல்லாம் ஊரின் நெறிகளை உடைத்து நாசம் செய்கிறார்கள்.

பசுமை புரட்சி வெண்மை புரட்சி என வந்த பிறகு மக்களுக்கும் மண்ணுக்கும் கம்மாயிக்கும் நடக்கும் அழிவுகள். உழைத்து உண்டு வாழ்ந்து உருலைக்குடி மக்களை இலவசம் என்று கூறி சிலேபி மீன் குஞ்சுகள், சீமை கருவேல மர விதைகள், சீமை மாடுகள், ஒட்டு ரக நெல்விதைகள், பிராயிளர் கோழிகள் என அரசுக்கொண்டு வரும் திட்டங்களினால் நடக்கும் தீமைகள் எப்படி பாரம்பரிய நெல்,மாடுகள் என எல்லாம் பரிக்கப்படுகிறது. தெள்ளத்தெளிவாக பதிவு செய்கிறார்.

சின்னதுரை ஊர் தலைவர் ஆன பிறகு கம்மாய் பரமறப்பை மடைக்குடும்பன் நீற்பாயிச்சி யிடம் இருந்து பிடிங்கி வாச்மேன் என்ற ஒரு அரசு அழுவளரை நீயமிக்கிறார்கள். அதன் பின் கம்மாய் பரமரிப்பு இன்றி நாமாக தொடங்கு கிறது. ஊர்மக்கள் ஒன்று கூடி கேட்கும் போது அதிகரிகளுக்கு தகவல் சொல்லியாச்சி அவங்க வந்து தான் பன்னுவாங்க கம்மாக்குள்ள மரவெட்ட கூடாது அது வனத்துரைக்கு சொந்தம், மண்ணு அள்ளக்கூடாது அது பொதுப்பணித்துறைக்கு சொந்தம் என அடிக்கி கொண்டே போவது. இப்படியே நகர்த்தி கம்மாய் மண்ணேரி கடுகளும் புதருமாக மாறி தண்ணீரை தேக்கி வைக்கமுடியாமல் நாசமாய் போகிறது.

நடப்பதை எல்லாம் பார்த்து வேதனைப்பட்டு ஊரின் எதிர்காலத்தை கூறி குப்பாண்டி இறத்து போகிறான், அந்த வரிகளை படிக்கும் போது இன்றை நிலையை நாம் உணரலாம்.

இப்படி இந்த புதினத்தை சொல்லி தீரது ஆகச்சிறந்த நூல் வாய்ப்பு இருந்தால் வாசித்துப்பாருங்கள். நன்றி.


பேரன்புடன்,
மனோ குணசேகன்,
புள்ளவராயன்குடிக்காடு, மன்னார்குடி.
30/08/2020

Leave a Reply