Home>>இந்தியா>>கார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் பற்றி கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய வேளாண்மைத்துறையை கார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்!

பாஜகவின் இந்த சர்வாதிகார போக்கிற்கு கேரள அரசு மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.

கார்பரேட் முதலாளிகளின் நலனுக்கு எதிரான பழைய மக்கள்நல சட்டங்கள், கொள்கைகள், அரசு நிறுவனங்கள், கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு ஏற்ப அவைகள் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வழியில் இந்திய வேளாண்மைத்துறையை கார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்!
இந்தச் சட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களும், பாஜகவின் அடிவருடிகள் ஆளும் மாநிலங்களைத் தவிர பிற அனைத்து மாநில முதலமைச்சர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் இப்போராட்டத்தை போர்க்குணத்துடன் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தமது மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இத்தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற அவசரகால அடிப்படையில் கேரள சட்டமன்றத்தைக் கூட்ட ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளது அம்மாநில அரசு. இதை கேரள அமைச்சரவையும் அங்கீகரித்திருக்கிறது.
இதற்கு அனுமதி மறுத்து அனுப்பிய கடிதத்தில், 15 நாட்கள் முன்கூட்டியே இது குறித்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், அவசர காலத் தேவை என்ற கேரள அரசின் காரணத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான். ஆளுநரின் இந்த முடிவு அரசியல்சாசன சட்டத்திற்கு விரோதமானது. ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது.

எனவே, அரசியல்சாசனத்தின் பிரிவு 7-ன் படி “விவசாயம்” என்பது மாநில அரசு சட்டமியற்றும் அதிகாரத்துக்குக் கீழ் வரும் பகுதி என்பதால், 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து புதிய சட்டம் இயற்றுவது குறித்து மாநில அரசு பேசி வருகிறது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதே போன்று, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்த்து புதிய சட்டம் இயற்றுவதற்கு கேரள அரசுக்கு உரிமையுள்ளது. இதனை ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு தீர்மானம் இயற்றுவதற்கு தடையாக இருந்து பிரச்சினையையும் முரண்பாட்டையும் உண்டாக்குவது கேரள ஆளுநருக்கு இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கேரள மாநில அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது, எதிர்கட்சி நிலையெடுத்துப் பேசியவர் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.

ஆளுநர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக. பாஜகவின் இந்த சர்வாதிகார போக்கிற்கு கேரள அரசு மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

முகநூல் பதிவு முகவரி:


செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.

Leave a Reply