Home>>இலக்கியம்>>பூக்களை எரிக்காதீர்கள் !!
இலக்கியம்கவிதைபெண்கள் பகுதி

பூக்களை எரிக்காதீர்கள் !!

-விக்னேசுவரி இராமசாமி, சுந்தம்பட்டி
(2051 ஆனி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


கருவான என்னை உருவாகாமல்
நான் என்பதால் கலைத்தீர்கள்!

உருவாகி வந்த என்னை
நான் என்பதால் கள்ளிப்பால் மூலம்
என்னை கிள்ளி எறிந்தீர்கள் !

மொட்டு என்று பாராமல் நான் என்பதால் என்னை
உங்கள் காமப்பசிக்கு சிதைத்தீர்கள்!!

வீட்டுச் சுமை குறைக்க
வேலைக்கு செல்லும் என்னை
நான் என்பதால் தவறாக
நடந்து கொண்டீர்கள் !

பேருந்தில் பயணம் செய்த என்னை
நான் என்பதால் தங்கள்
சுகத்திற்கு என்னை இடித்தீர்கள் !

இடிக்க நினைக்கும் என்னை நான் என்பதால் பணம் இல்லமால்
யாரும் கட்ட மறுக்கிறீர்கள் !!

கட்டியபிறகும் நான் என்பதால் பணத்தாசையில் என்னை
கொடுமைப்படுத்தினீர்கள்!!

நான் என்பதால் காதலித்து ஏமாற்றினீர்கள்!!

திருமணம் செய்தும் ஏமாற்றுகிறீர்கள்!!

உங்கள் தவறை மறைக்க தாய்மை அடைய முடியாத என்னை
நான் என்பதால் மலடி
என்று பழி தூற்றுகிறீர்கள் !

இரவில் வெளியே வந்தால்
நான் என்பதால் என்னை அரக்கர்கள் நீங்கள்
பலாத்காரம் செய்தீர்கள்!

இப்போது
யார் மீதோ உள்ள உங்களுக்கு உள்ள முன்விரோதம் காரணமாக பூவாகிய
என்னை நான் என்பதால்
என்னை எரித்து கொள்கிறீர்கள் !

நான் பெண்ணாக பிறந்தது என் குற்றமா??..
பூக்களை மலர விடுங்கள்!!!

படஉதவி: @noaheleazar

Leave a Reply