Home>>அரசியல்>>விவசாயிகளின் பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாசிச மோடி அரசு.
அரசியல்இந்தியாசெய்திகள்வேளாண்மை

விவசாயிகளின் பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாசிச மோடி அரசு.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் அவர்கள் தன்னுடைய சமூக ஊடக கணக்கில் உழவர்களை அழிக்கும் 3 வேளாண்சட்டங்களை திரும்பப்பெற கோரி டிராக்டர் வாகனத்தில் டெல்கியை நோக்கி பேரணியாக வந்த உழவர்கள் மீது அங்குள்ள காவல்துறையே வன்முறையை ஏவியதை கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் கருத்தை கீழே கொடுத்துள்ளோம்.


டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நாம் களத்தில் திரள வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாசிச பாஜக அரசு இந்திய குடியரசு நாளில், உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தடியடி நடத்தியும், புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியும், தன் கோர முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

டெல்லியில் 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் அதே வேளையில், அமைதி வழியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. மோடி அரசின் இந்த அணுகுமுறையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கதக்கது.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் போராட்டக்களத்திலேயே உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர்.

பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தோடு தடியடி நடத்தி உள்ளனர். மேலும் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது காவல்துறை. இந்த காவல்துறையின் அடக்குமுறையால், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது துயரமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ள நிகழ்வு, மிகவும் வேதனை அளிக்கிறது.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை, மோடி, அமித்ஷாவின் ஏவல் துறையாக செயல்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

கடந்த 2 மாதங்களாக அமைதியாக, கட்டுகோப்புடன் விவசாயிகள் போராடி வந்த நிலையில், விவசாயிகளின் பேரணியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாசிச மோடி அரசு.

காவல்துறையே வன்முறையில் ஈடுபடுவதும், விவசாயிகள் மீது தடியடி நடத்துவதும் அரச பயங்கரவாதம் ஆகும். விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசு, எப்படியாவது விவசாயிகளை ஒடுக்கி கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்திய விவசாய உணவுப் பொருள் உற்பத்திதையை அடகு வைக்கத் துடிக்கிறது.

வேளாண் சட்டத்தை அம்பானி, அதானிக்கும் பணிந்து அவசர அவசரமாக நிறைவேற்றி, அதற்காக சொந்த நாட்டு விவசாயிகளைக் கொல்வதற்கும் தயாராக இருக்கிற பாசிச மோடி அரசுக்கு, டெல்லியில் விவசாயிகள் பாடம் புகட்டி வருகின்றனர்.

எனவே, மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்பதை உணர்ந்து, மூன்று விவசாயச் சட்டங்களையும் மோடி அரசு ரத்து செய்ய வேண்டும் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில், விவசாய சங்கங்களின் தலைவர்களையும் குறி வைத்து தாக்க பாசிச மோடி அரசும், காவல்துறையும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அராஜக போக்கை கைவிட்டு விட்டு, விவசாயிகளின் கோரிக்கை ஏற்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

முகநூல் பதிவின் முகவரி: https://www.facebook.com/228584773834/posts/10160669902303835/


செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.

Leave a Reply