Home>>தமிழ்நாடு>>போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி
தமிழ்நாடு

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி போக்குவரத்து காவல் துறைக்கும் காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

ஐயா திருத்துறைப்பூண்டி நாகை ஸ்வீட் ஸ்டால் அருகே காமராஜர் தெரு செல்லும் முகப்பில் அங்கு இருக்கும் வணிகர்கள் மனோ சூப்பர் மார்க்கெட் தஞ்சை உழவன் ஏஜென்சி அங்கிருக்கும்பழக்கடைகள் மற்றும் சிமெண்ட் கடை அந்த ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக லாரிகளையும் மினிவேன்களையும் பகலிலே மக்கள் கூட்டம் அதிகமாகும் நேரங்களில் நிறுத்தி, குறிப்பாக சாலையில் இருபுறங்களும் போக்குவரத்திற்கு இடையூறாக லாரிகளை நிறுத்தி வாகனத்தில் இருந்து பொருள்களை இறக்கி அல்லது ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நெரிசல் அதிகமாகிறது கொஞ்சம் லாரியை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினாள், அந்த லாரியில் இருக்கும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், அதன் ஓட்டுனர்கள், மினி வேன் ஓட்டுனர்கள் அங்கு போய், வருபவர்களிடம் சண்டையிடுகிறார்கள்.

இது வெகு காலமாகவே நடந்து வருகிறது. இதனால் அந்த காமராஜர் தெரு சென்று வருவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே காவல்துறை தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி நகரம் மிகவும் குறுகிய சாலை வசதி கொண்ட ஒரு நகரமாகும். இரவு நேரங்களில் வணிகர்கள் லாரியை நிறுத்தி பொருள்களை இறக்கினால் அல்லது பொருள்களை ஏற்றினால், பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர வழிவகுக்கும்.

அதை விடுத்து இப்படி எந்த நேரமும் லாரிகளிலும், வேன்களிலும் பொருள்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக தான் இருக்கும். போக்குவரத்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை கேசவன் என்ற சகோதரர் தன்னுடைய முகநூல் பதிவில் ஆதங்கத்துடன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/story.php?story_fbid=888965481674887&id=100016843297578&sfnsn=wiwspwa


செய்தி சேகரிப்பு:
இராஜ்குமார், திருத்துறைப்பூண்டி.

Leave a Reply