மன்னார்குடியை சேர்ந்த பிரபல இருதய மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களின் அண்ணன் இலரா மோகன் அவர்களின் மகன் மோகன் இராஜேஷ் இலரா அவர்கள், அவரது முன்னெடுப்பில் சிங்கப்பூரில் உள்ள லயன்ஸ்போட் நிறுவனத்தின் மூலம் கொரோனா சிகிச்சை பணிக்காக 33 ஆக்சிசன் செறிவூட்டிகளை தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.
மோகன் இராஜேஷ் இலரா அவர்கள் தஞ்சையில் பிறந்து, சென்னை மற்றும் மன்னார்குடியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். மற்றும் கோவை அமிர்தா பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்து சிங்கப்பூரில் மேல்நிலை பொறியியல் படித்து, சிங்கப்பூர் பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகி, இயந்திர மனிதன் ரோபோ துறையில் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் அரசின் ஊக்குவிப்பால், லயன்ஸ்போட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை துவங்கி அரசோடு, தானும் இணை நிறுவனராகவும், பங்குதாரராகவும் பதவி வகித்து வருகிறார். இவரின் நிறுவனம் உருவாக்கியுள்ள இயந்திர மனிதனைக் கொண்டு, நிறுவனங்கள் மற்றும் வீடுகளை எளிதாகவும், விரைவாகவும் தூய்மைப்படுத்தலாம்.
மோகன் இராஜேஷ் இலரா அவர்களின் முன்னெடுப்பில் லயன்ஸ்போட் நிறுவனத்தால் கொரோனா சிகிச்சை பணிக்காக 29 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 33 ஆக்சிசன் செறிவூட்டிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை 8 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.இரவிக்குமார், கண்காணிப்பாளர் மரு.மருதுதுரை ஆகியோர் முன்னிலையில் என்னால் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் லயன்ஸ்போட் நிறுவனத்துக்கும், இதற்கான ஏற்பாடுகளை கண்ணும் கருத்துமாக செய்த மருத்துவர் மருதுதுரை அவர்களுக்கும் நன்றி!
—
தகவல் உதவி:
மருத்துவர் பாரதிச்செல்வன்,
மன்னார்குடி.
செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.