Home>>அரசியல்>>அரசு அதிகாரத்தின் முன்பு தோற்றுப் போய் விட்டோம்!
அரசியல்செய்திகள்

அரசு அதிகாரத்தின் முன்பு தோற்றுப் போய் விட்டோம்!

நகர்ப்புறங்களில் இருந்து, நகரங்களை உருவாக்கிய, இன்றும் நகரத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்ற ஏழை எளிய ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பதாக கூறி ஆளும் அரசுகளால் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.
சிலருக்கு மாற்று வீடுகள் கூட இதுவரைக்கும் கொடுக்கப்படவில்லை. நகரங்களில் இருந்து சுமார் 20 முதல் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் எத்தகைய அடிப்படைவசதிகளும் இல்லாத இடங்களில், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள சின்னஞ்சிறு வீடுகளில் குடியமர்த்த படுகின்றனர்.
நூற்றாண்டுகளாக கூடியிருந்த மக்கள் தங்களுடைய வாழிடங்களுக்கு எத்தகைய உரிமையும் கோர முடியாத அனாதைகளாக ஆடுகின்ற அரசுகளை எதிர்த்து போராட முடியாமல் மனம் நொந்த நிலையில் வெளியேறி வருகின்றனர்
மக்களை வெளியேற்றுவதற்காக அரசு எத்தகைய எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர். மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை துண்டித்து, காவல்துறையினரை குவித்து அச்சுறுத்தி, புல்டோசர் களை வீட்டின் முன்னால் நிறுத்தி பயமுறுத்தி நீதிமன்ற தீர்ப்புகளை காட்டி அச்சுறுத்தி பொருள்களோடு வீடுகளை தரைமட்டமாக இடித்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுகின்றனர்.
இத்தகைய வழக்குகளில் மக்களுக்கு ஞாயங்கள் எதையும் எதையும் நீதிமன்றங்கள் கொடுப்பதில்லை. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு தடை கோருவதற்கு நீதிமன்றங்களுக்கு செல்ல மக்கள் அஞ்சும் அளவுக்கு நீதிமன்றங்கள் பாரபட்சமாக செயலாற்றி வருகின்றன. நீதிமன்றங்களுக்கு செல்லும் பட்சத்தில் உடனடியாக வெளியேற்ற படுவோம் என்பது உச்ச, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியில் பலமுறை நிரூபணமாகியிருக்கிறது.
அரசியல் கட்சியினரும் பெரிய அளவிற்கு இந்த மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக எத்தகைய பெரும் போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மாறாக ஏதாவது ஒரு காரணம் கூறி சமரசம் செய்து கொள்கின்றனர். அரசை எதிர்த்துப் போராட முடியாது பலவீனமே இப்படிப்பட்ட சமரசத்திற்கு அவர்களைத் தள்ளுகிறது. அறிவுத்துறையினர் எழுதுவதோடும் பேசுவதோடு தங்களுடைய கடமை முடிந்தது என்று அடுத்த வேலைக்கு சென்று விடுகின்றனர்.
எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இயக்கங்கள், வெளியேற்றப்படுவது தாங்கிக்கொள்ள முடியாத மக்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து போராடி வருகின்றனர். பலவீனமான இந்த சக்திகளால் அரசினுடைய பெரும் பலத்தின் முன்பாக தொடர்ந்து நிற்க இயலவில்லை. எடுப்பவர்கள் மீது
காவல்துறை மூலமாக அடக்குமுறைகள் செய்து, வழக்குகள் பதிவு செய்து அச்சுறுத்தி தொடர்ந்து மக்கள் வெளியேற்றப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
மக்கள் வலுக்கட்டாயமாக அரசால் வெளியேற்றப்படுகின்ற போது பொதுவெளியில் கூக்குரல் இடுகின்ற தோழர்கள், இயக்கத்தினர் களத்திற்கு வருவதில்லை. சில நாட்களுக்கு பின்னிட்டு அதனை வசதியாக மறந்து விடுகின்றனர்.
பெரிய அளவுக்கு அரசியல் பலம் இல்லாத சமூகங்களாக இருக்கின்ற காரணத்தினாலேயே நகர்ப்புறத்தில் புறம்போக்கு இடத்தில் நூற்றாண்டுகளாக குடியிருந்து வருகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இத்தகைய அநீதி தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
Source: (Malaravan Arthur – https://www.facebook.com/bharathiselvanr/posts/4689267521108094)

Leave a Reply