ஆடி திருவாதிரை நாளான இன்று (05/08/2021) மாமன்னன் வீரத்தமிழன் அயசேந்திர சோழனின் புகழை பேசுகிறோம்.
வீரத்தில் ஆதித்த கரிகாலன் அழகில் சுந்தர சோழன் நிதானத்தில் உத்தம சோழன் என்று பலகூறுகளாக பேசினாலும், அரசேந்திரன் இராஜராஜனின் மறுத்தோன்றல் இராஜராஜன் அரசியல் சூழலில் இளமையில் செய்ய நினைத்த அனைத்தையும் தன் வாழ்நாளில் செய்து காட்டியவர் அரசேந்திரன்.
ஒரு மகனால் தன் தந்தையை இந்தளவு நேசிக்க உளவியலாக சுவாசிக்க முடியுமா என்றால் ஐயமே! தன் தந்தையின் கனவிற்காக காலனையும் கலங்கடித்த மாமன்னன் அரசேந்திரன்.
அவருக்கு ஒரு பள்ளி படை அமைத்து அதை உலகரிய செய்திருந்தால் இன்று கோரிக்கைக்கான வேலை இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் ஆதித்த கரிகாலன் மரணம் எப்படி மர்மமோ அதுபோலவே ஆரிய சூழ்ச்சி
அரசேந்திரனின் இறுதி காலத்தை மர்மம் நிறைந்ததாக்கிவிட்டது.
ஆகவே இக்கேள்வியின் பின்னணி தெரியவில்லை ஆனால் தமிழ்நாடு அரசு நினைத்தால் இதற்கான பதிலையும் பலரின் வேண்டுதலையும் ஒரே நொடியில் தீர்க்கலாம்.
உலகை ஆட்சி செய்து சனநாதன் என்று பெயரெடுத்த சக்கரவர்த்தி இராஜராஜனின் சமாது கேட்பாரற்று உடையாளூரில் கிடக்கிறது.
இவ்விடத்தில் மிகப்பெரிய நினைவாலயம் அமைத்து இராஜராஜன் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை வைப்போம்.
—
கட்டுரை:
இராசசேகரன்,
மன்னார்குடி.
பட உதவி:
இணையம்.