Home>>அரசியல்>>வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா?

இந்திய அரசே – வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா?

தமிழகத்தில் உள்ள ஏதலிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடு. முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்.

இலங்கையில் நடந்த, இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல தமிழர்கள் இந்தியாவிற்கு வந்து இன்றளவும், தமிழக மற்றும் இந்திய அரசின் தீவிர கண்காணிப்பில் ஏதலியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 80,000 பேர்கள் தான்.

தமிழக காவல்துறை மற்றும் இந்திய உளவுத்துறை தரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்ட அனுதினமும் ஏதலிகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்திய அரசு இன்று வரை அவர்களுக்கு குடியுரிமை மறுத்துள்ளது.

அது மட்டுமல்ல சிறப்பு முகாம்களில் சிறையை காட்டிலும் வேதனை, விசாரணை, தண்டனை மற்றும் பல கொடுமைகள் நடைபெறுகிறது. சிறைக்கு, சிறப்பு முகாம் என்று பெயர். ஆனால், வங்காள தேசத்தில்
இருந்து, இந்திய வந்துள்ள வங்காளிகள் எத்தனை பேர் என்ற கேள்வி பாராளுமன்றத்தில் 2004 ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட பொழுது திரு.மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், உள்துறை துணை அமைச்சராக இருந்த திரு.சிறிபிரகாஸ் ஜஸ்வால் அவர்கள், ‘வங்காள தேசத்திலிருந்து, ஒரு கோடியே 20 லட்சம் பேர் சட்டபூர்வமற்று உள்ளே நுழைந்தார்கள்’ என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள சிபிஎம், காங்கிரஸ், அன்றைய பிஜேபி எல்லோரும் வங்கதேசத்தில் இருந்து வந்த வங்காளிகளுக்கு, ஆதரவாக தான் இருந்தார்கள்.

அவர்களை எந்த ஏதலி முகாம்களிலும் அடைக்கவில்லை. காவல்துறை விசாரணை ஏதும் இல்லை. எல்லா வங்காள தேசத்து அகதிகளும், இந்தியா முழுவதும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

இப்பொழுது, பாஜக வங்காளதேசத்தில் இருந்து வந்த இசுலாமியரை கணக்கெடுக்க கூறுகிறது, ஆனால் அங்கிருந்த வந்த வங்காள இந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது. கொடுமை. மம்தா, சிபிஎம், காங்கிரஸ் போன்றவர்கள் அனைத்து மதத்தை சார்ந்த, வாங்களிகளையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இங்கு நாம் என்ன பார்க்க வேண்டியது என்றால், இங்குள்ள அதிமுக,திமுக, சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் நமது ஈழத்தமிழர்களை ஏதிலி முகாம், சிறப்பு முகாம் என்று இந்திய அரசோடு சேர்ந்தே, தமிழர்களை வஞ்சிக்கிறார்கள்.

வங்காள தேசத்தில் இருந்து வந்த ஏதிலியான திரு.நிதிஷ் பிரமானிக், அவர்களுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதிவி கொடுத்து அழகு பார்க்கிறது பாஜக.

மம்தா பானர்ஜி ஒருபடி மேலே சென்று, வங்காள தேசத்தில் இருந்து வந்த வங்காளிகள் அனைவரும் இந்தியர்கள் தான், அவர்கள் மறுபடியும் குடியுரிமை வாங்க தேவையில்லை என்றே கூறுகிறார். வங்கதேசியர்கள் அனைவருக்கும் சிபிஎம், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிகளில் குடும்ப அட்டைகள் தந்தார்கள், ஆதார் அட்டை வாங்க வசதிகள் அனைத்தும் செய்து தந்தார்கள்.

இங்கு தமிழக அரசுகள் மாறி, மாறி ஏதிலிகளுக்கு நெருக்கடி தான் கொடுத்தார்கள். தமிழக தலைவர் ஒருவர் ஏதலிக்களுக்காகவே ஒரு சிறைச்சாலையை நிறுவி, அதற்கு சிறப்பு முகாம் என்று பெயரிட்டார்.

ஏனென்றால் சிறை என்று பெயர் வைத்தால் அவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டை கூறி நீதிமன்றத்தில் நிருபிக்க வேண்டும். ஆனால் சிறப்பு முகாம் என்று பெயர் வைத்து விட்டால், நீதி மன்றத்திற்கே செல்ல வேண்டிய அவசியமில்லை.

நேரிடையாக சிறை தான். மன்னிக்கவும் சிறப்பு முகாம் தான். ஏதலிகளின் சிறைச்சாலைக்கு பெயர் சிறப்பு முகாம். தமிழர்களே விழித்து கொள்வோம். நமது இன உறவுகளை விடுவிக்க, ஏதிலி முகாம்கள், மற்றும் சிறப்பு முகாம்களை இழுத்து மூட தமிழர்களை திரட்டி போராடுவோம்.

தமிழர்களுக்கு குடியுரிமை தர மறுத்து வஞ்சிக்கும் இந்திய அரசை கண்டிப்போம். தமிழர்களின் ‘நெஞ்சில் உள்ள முள்ளான, ஏதிலிகளின் சிறப்பு முகாம்களை’ உடனடியாக மூட தமிழக அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.


பதிவு:
விசுவநாதன் கரிகாலன்

Leave a Reply