இன்றைய (24/08/2021) சட்டமன்ற அறிவிப்பில், மன்னார்குடி நகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்றும், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
மன்னார்குடி நகராட்சிக்கு இந்த திட்டங்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்குமென்றாலும், இந்த அரசு எதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை சமூக பணியாளர் திரு.இராசசேகரன் அவர்கள் தன்னுடைய கருத்தை முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதை இங்கு பகிர்கிறோம்.
பாதாள சாக்கடை திட்டம் சரியான திட்டமிடலில் மிகக்குறைந்த நேரத்தில் வலிமையாக செய்து முடித்தால் மன்னார்குடி கண்டிப்பாக மின்னும்.
இன்றைய பேருந்து நிலையங்கள் இரண்டையும் இணைத்து கடைத்தெருவில் இருக்கிற தரைக்கடைகளை இணைத்து அனைவருக்கும் கடைகளை ஒதுக்கி கடைத்தெருவின் போக்குவரத்து நெரிசலையும் மன்னார்குடி கடைத்தெருவின் சிறப்பும் மாறாமல் கட்டமைத்தால் மன்னார்குடி கண்டிப்பாக மின்னும்.
அதைவிடுத்து புதிதாக இடம் ஒதுக்கி பேருந்து நிலையம் அமைத்தால் மன்னார்குடி பொருளாதாரம் பாதிக்கப்படும்.
மன்னை கடைத்தெருவின் சிறப்பான கட்டமைப்பே தேரடியில் தொடங்கி பந்தலடிக்குள் கல்யாணம் முதல் கருமாதி வரையில் அனைத்திற்கான பொருட்களையும் வாங்கி செல்லலாம் இதற்கு மையமாக பேருந்து நிலையம்.
அதாவது பெரிய கோவில் அதை சுற்றி குடியிருப்பு பேருந்து நிலையம் அதை சுற்றி வணிக கட்டமைப்புகள் பந்தலடிக்கு மேற்கே குடியிருப்பு கல்விச்சாலை மற்றும் அரசு அலுவலகம் என்று கலவையான அற்புத கட்டமைப்பு.
இதில் எந்த இடம் சிதைக்கப்பட்டாலும் கண்ணாடி கூண்டினை உடைப்பதற்கு சமமானது தேன்கூடை கலைப்பதற்கு சமமானதாக மட்டுமே இருக்கும் இதை செய்யாதவரை மன்னை மின்னும்.
மன்னார்குடி விரிவாக்கம் சிறப்பானது அதற்காக நீர்நிலைகளையும், வயல்வெளிகளையும் சிதைக்காமல் இருந்தால் கண்டிப்பாக மன்னை மின்னும்.
—
இராசசேகரன்,
மன்னார்குடி.