Home>>இந்தியா>>தமிழர் வணிக எழுச்சி நாள்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழர் வணிக எழுச்சி நாள்

வெள்ளையர் அடக்குமுறையில் அடிமையாக இருந்த காலத்திலேயே தன்மான தற்சார்பே தீர்வு என்று செயல்படுத்திய வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் இன்று (05/09/2021).

இந்த தினத்தில் நாம் கண்டிப்பாக ஒன்றியத்தின் தனியார் தாராளயனமைய பொருளாதார சுரண்டலையும்
பன்னாட்டு முதலாளிகளின் நமது நிலம் வேட்டைக்காடாக மாறுவது குறித்தும் ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இன்று இந்தீய ஒன்றியமே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு அழியும் நிலை உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் பண புழக்கம் குறைந்தது மட்டுமே. இங்கே நூறு கோடி பேர் அத்தியாவசிய செலவிற்கு வருமானம் இல்லாத நிலையில் முதலாளிகளின் இலாபத்திற்காக அநாவசிய செலவு செய்ய பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் சேமிப்பின்றி கடன் அதிகரித்து செலவு செய்ய வழியற்ற நிலை ஒருபுறம் ஏற்பட்டுள்ளது மறுபுறம் முதலாளிகளின் வராகடன் மற்றும் பணப்பதுக்கல் இரண்டும் இணைந்து பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு மொத்த முதலீடுகளும் குறைகிறது.

தனியார்மயம் தாராளமயம் மற்றும் உலக மயமாக்கல் எல்லாம் குறைந்த மக்கள் தொகை கொண்ட இடத்திற்கு பயன்படும் அதுவும் தன்னிறைவை தராது இதுவே எதார்த்தம். யதார்த்த நிலை இப்படி இருக்க நூறு கோடிக்கு மேல் மக்கள் சக்தி கொண்ட மண்ணில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்.

சாத்தியமில்லை என்பதை அரசு ஏற்க வேண்டும் ஆனால் அவர்கள் ஏற்கமாட்டார்கள். காரணம் தற்சார்போ
அரசு துறையோ பொதுத்துறையோ வளர்ச்சி பெற்றால் நமது நிதிநிலைமை அதிகரிக்கும் அதன் வழியாக வரி குறைப்பு ஏற்பட்டு மக்கள் தன்னிறைவு அடைவர் சேமிப்பு வங்கிகளை ஆக்கிரமிக்கும் இதனால் பணமதிப்பு உயரும் முதலீடு உயரும்.

இவையெல்லாம் மக்களுக்கும் அரசிற்கும் நன்மை செய்யும் ஆனால் ஆட்சியாளர்களுக்கு நன்மைபயக்காது.
இந்த பொருளாதார கொள்கை முழுக்கமுழுக்க ஆட்சியாளர்களின் நன்மைக்காக மட்டுமே செயல்படுகிறது.

அதாவது அரசு கஜானாவிற்கு வரவேண்டிய மிகப்பெரிய நிதி முதலாளிகளுக்கும் ஆட்சியாளர்க்கும் சென்று பதுங்கி மந்தநிலையை உருவாக்குகிறது. இவர்களை இதிலிருந்து மீட்க இயலாது வேறுவழியில்லை நாம் தான் மாறவேண்டும்.

ஒரு வருடம் மட்டும் நமக்கு அத்தியாவசிய தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவோம் அடிப்படை
தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வோம். முழுக்கமுழுக்க உள்ளூர் பொருட்களை உள்நாட்டு பொருட்களை வாங்குவோம்.

சராசரியாக ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் 400 சதுரடி கடையில் முடியும். ஆனால் நான்காயிரம் ஐந்தாயிரம் சதுரடியில் வணிக வளாகங்கள் இயங்குகின்றன. இதில் நமது தேவைப்போக மீதம் நான்காயிரம் சதுரடியில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் நமக்கான அநாவசிய தேவைகள் இவைகளே நமது சேமிப்பை ஆக்கிரமிக்கின்றன இவைகளை புறந்தள்ளுவோம்.

நாம் வாங்குவதை நிறுத்தினால் போதும் முதலாளிகள் கூடாரத்தை காலிசெய்து கொண்டு வேறு சந்தையை நோக்கி நகர்வார்கள். முதலாளித்துவம் என்பது சங்கிலி தொடர் இவர்கள் இணைந்தே இருப்பர் இந்த சங்கிலி அறுப்பட்டால் நமது நிலத்தை அழிக்கும் நாசகார திட்டங்களை செயல்படுத்த தயாராக இருக்கும் முதலாளிகளும் ஓடவேண்டிய நிலை ஏற்படும்.

அதுபோல தற்சார்பை வளர்த்து உள்ளூர் உற்பத்திகளை பெறுக்குவதன் மூலமாக நமது பொருளாதாரம் தன்னிறைவாகும் நாட்டின் பொருளாதாரமும் உயரும். அன்னிய முதலீடுகளை குறைத்து நாம் அன்னிய மண்ணில் முதலீடு செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்.

அன்றே வ.உ.சி. கனவு வெல்லும்.


செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply