வெள்ளிக்கிழமை (02/10/2021) பிற்பகல் 3.15 மணியளவில், தஞ்சாவூர், கரந்தையில் உள்ள உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் பிற்பகல் இடைவேளை நேரத்தின் போது, 10 ஆம் வகுப்பு அ பிரிவைச் சார்ந்த மாணவிகள் எஸ். ஸ்ரீமதி, பி. தர்ஷினி, ஆர்.தாரணி, ஏ. கண்மணி, ஆர். மீனாட்சி ஆகிய ஐந்து மாணவிகள், பள்ளி வளாகத்தில், ஒரு தங்க மோதிரம், தரையில் கிடந்ததைக் கண்டு எடுத்து, பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும், பட்டதாரி கணித ஆசிரியரான கி.ஜெயக்குமார் அவர்களிடம் கொடுத்தனர்.
உடன் இருந்த உடற்கல்வி ஆசிரியர் திரு து. நடராசன் அவர்கள், மாணவிகள் ஐவரையும் ஒளிப்படம் எடுத்தார். பின்னர் தங்க மோதிரம், பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றும் இதுவரை அந்த தங்க மோதிரத்தைத் தேடி அதன் உரிமையாளர் யாரும் வரவில்லை என்று ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,
கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
கரந்தை,
தஞ்சாவூர் – 613002
தொடர்பு இலக்கம்:
+91 94434 76716 ஆசிரியர் ஜெயக்குமார்.
—
செய்தி உதவி:
திரு. மோகன்,
திருச்சி.