நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் உணவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தல்.
காவிரிப்படுகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்ய மறுத்து வருவதாக விவசாயிகள் கூறிவந்தனர்.
இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான க.மாரிமுத்து எம்எல்ஏ அவர்கள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமிகு அர.சக்கரபாணி அவர்களை நேரில் சந்தித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
திருத்துறைப்பூண்டி சட்டபேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் உணவுத்துறை அமைச்சர் அவர்களுடனான சந்திப்பின் போது கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதோடு கோரிக்கை மனுவும் அளித்தார்…
1. அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22% வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
2. தேவையான இடங்களில் கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி கொள்முதல் செய்திட வேண்டும்.
3. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி சாக்குகள் வழங்கபட வேண்டும்.
4. தேவையான இடங்களில் விவசாயிகளின் இடத்திற்கே சென்று நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திட வேண்டும்.
5. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்மூட்டைகளை மழையில் இருந்து பாதுகாத்திட நடவடிக்கை வேண்டும்.
மேலும் இந்த சந்திப்பில் திருத்துறைபூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு ‘மார்க்சீயம் இன்றும் என்றும்’ என்ற புத்தகம் பரிசலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
09/10/2021