தமிழக மீனவர் ராஜ்கிரன் இறந்திருக்கின்றார். வழக்கம் போலவே ’நீரில் மூழ்கி இறந்துவிட்டார்’ என்கிறது, “நட்பு நாடு” இலங்கை கடற்படை. உண்மை அதுவல்ல. பிடித்து அடித்து வதைத்து படுகொலை செய்திருக்கின்றார்கள். பிறகு பிரேதத்தை கடலில் வீசிவிட்டு, ‘தேடிக் கொண்டிருந்தோம், கரை ஒதுங்கியது என கதை கட்டுகிறது சிங்கள ராணுவம்.
மீனவர் ராஜ்கிரனின் சடலம் ஒதுங்கியிருந்த இடம் காரை நகர் கடற்கரை பகுதி.
அங்குதான் சிங்கள கடற்படை ராணுவ முகாம் ஒன்று உள்ளது. இந்த முகாமில் பாகிசுதானைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ‘பயிற்சி’ என்ற பெயரில் இருக்கின்றார்கள். பிடிபடும் தமிழக மீனவர்களை இங்கு வைத்துதான் வதை செய்து படுகொலை செய்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவ மாதம் 5 தமிழக மீனவர்கள் ‘கடலில் மூழ்கி உயிர் இழந்ததாக’ ஒப்படைத்தது சிங்கள ராணுவம். சுற்றி வலைக்கும் போதே நிறைய படகுகள் நம் எல்லைக்குள்ளாக திரும்பிவிடும். ஒரிரு படகுகள் மட்டும் சிக்குபடும். அதை தம் ராணுவ படகால் மோதி உடைக்கும் கிங்கள கடற்படை, அதில் இருப்பவர்களை பிடித்து, ‘காரை நகர் கப்பல்படை முகாமிற்கு இழுத்துச் செல்வார்கள். அவர்களைத்தான் நீரில் மூழ்கி இறந்ததாக ஒப்படைப்பார்கள்.
இதற்கு ஒரு முடிவுதான் இல்லை?
பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்று. இலங்கை ராணுவம் இப்படி அத்துமீறி உள்நுழைந்து தமிழக மீனவர்களை பிடித்தபடி இருந்தது. அதை முதல்வராக இருந்த எம்ஜிஆர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். ஒன்று நீங்கள் நடவடிக்கை எடுங்கள். அல்லது தமிழக காவல்துறையை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
அதன் பிறகு, பிரதமர் இந்திராகாந்தி, இந்திய கடல்படையை ஏவிவிட்டார். அது இலங்கையின் எல்லைக்குள்ளாகவே சென்று இலங்கை கடற்படை படகை அதிகாரிகளோடு இழுத்துவந்து, இராமேசுவரத்தில் கைது செய்து வைத்தது. பதறிபோன இலங்கை மன்னிப்பு கேட்டு, இந்தியாவுக்கான இலங்கை தூதரை அனுப்பி சமாதானம் சொல்லி, பிறகு அவர்களின் கடற்படையை மீட்டுச் சென்றது.
அதன் பிறகு அவர் இருந்தவரை அப்படி ஒரு நினைப்பற்று இருந்தது இலங்கை. இதை மறைந்த தலைவர் கலைஞர் அவர்களே எதிர்க்கட்சியாக இருந்தபோது சுட்டிக்காட்டி பேசி, அறிக்கை விட்டுள்ளார். அதாவது அதிமுக அரசு அப்படி செயல்பட வேண்டும். பிரதமர் மோடி இந்திய கடற்படையை அனுப்பி எல்லைமீறும் சிங்கள ராணுவத்தை கைது செய்து வரவேண்டும் என்றபடி கூறினார்.
அதை இன்றைய மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியை வலியுறுத்த வேண்டும். மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் செய்ய வேண்டும்.
குறிப்பு- எதிரி நாடு என்கிற பாகிஸ்தான்கூட இவ்வளவு இந்தியர்களை (தமிழர்களை) கொன்றதில்லை. ஆனால், ‘நட்பு நாடு’ என்கிற இலங்கை தொடர்ந்து தமிழர்களை படுகொலை செய்தபடி உள்ளது.
—
செய்தி உதவி:
திரு. பா.ஏகலைவன்,
ஊடகவியலாளர்.