Home>>இந்தியா>>படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறுவேளாண்மை

படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள், பத்திரிக்கையாளர் சாம்பல் இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா டேனியின் சதிதிட்டத்தால் அவனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரேற்றி படுகொலை செய்த விவசாயிகள் நால்வர் மற்றும் அதனை காணொலி எடுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஆகிய ஐவரின் புனித சாம்பல் இன்று சென்னை காந்திமண்டபத்தில் இருந்து தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு 26ஆம் தேதி வரை வீரவணக்கம் செலுத்தி வேதாரண்யம் கடலில் கரைக்கப்படுகிறது.

இதன் துவக்க நிகழ்வு இன்று சென்னையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) ஒருங்கிணைப்பில் பல்வேறு விவசாய சங்கங்கள் தொழிற்சங்கள் சமூக. இயக்கங்கள் சமுக ஆர்வலர்கள் ஒன்று கூடி வீரவணக்கம் செலுத்தி கண்டன முழக்கம் எழுப்பி உயிர்நீத்த தியாகிகள் மீது சத்தியம் செய்து சபதமேற்று தமிழக சுற்றுப்பயணத்தை SKM தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் தலைமையில் துவங்கியது.

அனைத்து விவசாய சங்க தலைவர்களும், விவசாய தொழிலாளர் சங்க தலைவர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெரியாரிய உணர்வாளர்களும், சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும், மார்க்ஸிய கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை ஆகியோர் கலந்துக்கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

காலை 10:00 மணியளவில் ஒரு மிகப்பெரிய அளவில் CITU தோழர்கள் பேரணியாக செங்கொடியுடன் திரண்டுவந்து பச்சை நிற விவசாய சங்க தோழர்களுடன் ஒருங்கிணைந்த நிகழ்வு கருத்தாழம் மிக்கதாக விளங்கியது.

எந்த காந்தியடிகளை சுட்டுக்கொன்று RSS பாசிசம் தன் அரசியல் கணக்கை துவங்கியதோ அந்த காந்தியடிகள் மண்டபத்தில் காந்திசிலை முன் RSS பாசிசத்துக்கு அறவழியில் பாடைக்கட்டி இறுதி ஊர்வலம் நடத்த தோழர்கள் பாசிசத்தின் கடைசி குண்டால் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் உள்ளிட்டோர் சாம்பல் மீது சபதம் செய்தது நெகிழ்சியான அர்த்தங்கள் பொதிந்த நிகழ்வு.

மக்கள் அதிகார தோழர். கணேசன் முழக்கத்தை தொடர்ந்து பெண்கள் அமைப்புத்தோழர்கள் முழக்கமிட வீரவணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைப்பெற்றது அகில இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் (AIKSS) சங்க தோழர். J.செபாஸ்டியன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

அனைத்து தலைவர்களும் மிகக்குறுகிய நேரத்தில் தங்கள் உரையை நிறைவு செய்து குறிபிட்ட நேரத்தில் மிகச்சரியாக சுற்றுபயணத்தை துவங்கி வைத்தனர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சென்னை பெருநகர் ஒருங்கிணைப்பாளர் தோழர் லில்லிமேரி பயணத்திற்கான சென்னை மாவட்டத்தின் பங்களிப்பாக ரூ.3000/- வழங்கி நன்றி செலுத்தி நிறைவுரையாற்றினார்.

மிகச்சரியாக 11:00 தோழர்கள் தாங்களின் தமிழக சுற்றுப்பயணத்தை துவங்கினர். எண்ணிலடங்கா உணர்வலைகள் ஓயாயமல் சுழன்று வீச வாகனம் புறப்பட்டு சென்றது. இந்த சாம்பல்கலச வாகனம் உங்கள் பகுதியை வந்தடையும் கால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. தோழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் அந்த வீரமறவர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தி நாம் உண்ணும் ஒரு பிடி சோற்றுக்கு மரியாதை செய்வோம்!


தோழமையுடன்,
ஜெயராஜப்பிரகாஷ் (பேரளம் பேரொளி),
கடைசிசோறு மீட்புக்குழு

Leave a Reply