Home>>சுற்றுசூழல்>>மன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடியில் மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?

மதிப்பிற்குரிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு…

மன்னார்குடி நகரத்தில் எத்தனையோ அடிப்படை பணிகள் செய்யபடாமல் இருக்கிறது, குடிசை பகுதியில் வாழும் பலர் வசிக்க வீடுகள் இல்லாமல் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆட்சியில் நீங்கள் என்னால் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக எதையும் செய்ய முடியவில்லை என கூறினீர்கள்.

அந்த நிலையில் உங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு தொகுதி மேம்பாட்டு நிதி தான், பல அடிப்படை பிரச்சனைகள் நகரில் இருக்க அவற்றிற்கு நிதி ஒதுக்காமல் அதில் 40 லட்சம் ரூபாயில் தெப்பகுளத்தை அழகுபடுத்த போகிறோம் என்றீர்கள். இந்த சூழ்நிலையில் இதற்கு இவ்வளவு நிதி ஓதுக்க வேண்டுமா?

வேறு அடிப்படை பணிகளுக்கு ஒதுக்கலாமே என்ற மாற்று கருத்து இருந்தாலும், அதற்கு எதிர்ப்பாக நாங்கள் செயல்படவில்லை. இந்த அழகுபடுத்தும் பணிக்கு இந்த சூழ்நிலையில் இவ்வளவு நிதி தேவையா என்பது மட்டுமே எங்கள் எண்ணமாக இருந்தது.

ஆனால் பணி தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் குளத்தை சுற்றி கிரில் அமைக்கும் பணியில் ஒரு பகுதி மட்டுமே நடைபெற்று வருகிறது. பணி மிக தொய்வாக நடந்து வருகிறது. குளத்திலேயே சுற்று சுவர் சீரமைப்பு உள்ளிட்ட சில பணிகள் இருக்கின்றன.

அவைகள் மேற்கொள்ளப்பட போவதாக தெரியவில்லை. கிரில் அமைக்கும் பணி அந்த ஒப்பந்தகாரர் பலன் அடைவதற்காக என்று மாறிவிட கூடாது.

இந்த நிலையில் திடீரென அங்கு இருந்த பல பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்றியது ஏன்? மரங்களை வளர்க்க எவ்வளவு சிரமபட வேண்டும் என நீங்கள் அறியாதது அல்ல.

இந்த மரங்களை வெட்டி தான் குளத்தை அழகுபடுத்த வேண்டுமா?
இந்த மரங்களை அகற்றாமல் அந்த பணிகளை மேற் கொள்ள முடியாதா?

இயற்கை அழகான மரங்களை அப்புற படுத்திவிட்டு அப்படி என்ன அழகுபடுத்த போகிறீர்கள் என்று புரியவில்லை. இந்த மரங்களை வெட்ட எப்படி அனுமதிக்கப்பட்டது?

இந்த மன்னார்குடி மக்களின் தேவைகளை மட்டுமல்ல, இந்த இயற்கையையும் சுற்று சூழலையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என்பது உங்களுக்கு தெரியாது அல்ல.

அப்படி இருந்தும் ஏன் இது போன்ற நடவடிக்கைகள் ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் நடந்திருந்தால் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


திரு. A. ஆனந்த ராஜ்,
முன்னாள் நகர மன்ற உறுப்பினர்,
மன்னார்குடி.


செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply