நேரு யுவ கேந்திரா நிறுவன நாள் மற்றும் குழந்தைகள் தின விழா நவம்பர் 14 திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் நேரு யுவ கேந்திரா, உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம், எம்.ஆர்.எம். பேச்சு பயிற்சி மற்றும் இந்திய சிலம்ப கோர்வை சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர். வி.ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டு உலக சிலம்ப இளைஞர் சம்மேளன சிலம்ப மாணவர்களின் சிலம்பாட்டத்தை பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
மேலும் திருச்சியில் குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் ஊனையூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணன், எடமலைபட்டி புதூர் உதவி தலைமை ஆசிரியர். லதா பாலாஜி, கலைக்காவிரி பேராசிரியர் சதீஷ்குமார், மூத்த சிலம்ப ஆசான் எம்.ஜெயக்குமார் மற்றும் இளம் சிலம்ப சாதனை நாயகி மோ.பி.சுகித்தா ஆகியோருக்கு ஒளிரும் மின்மினி விருதினை டாக்டர் வி.ஜெயபால் அவர்கள் வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக எம்.ஆர்.எம். இயக்குநர் சுந்தரேசன், தேசிய கல்லூரி பேராசிரியர் மாணிக்கம், ரவிச்சந்திரன், கணேஷ் மற்றும் ரவி ஆகியோர் பங்கு பெற்றனர்.
நேரு யுவ கேந்திரா மன்றத்தினர், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கு பெற்றனர்.
நிகழ்ச்சியில் உலக சிலம்ப இளைஞர் சம்மேளன சிலம்ப மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சிலம்ப விளையாட்டு திறனை செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியை நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சி மற்றும் கணக்கு உதவியாளர் மகேஷ்வரன் அவர்கள் நேரு யுவ கேந்திரா நிறுவன நாள் பற்றியும் நேரு யுவ கேந்திரா செயல்பாடுகள் பற்றியும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள். இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.