Home>>கதை>>யானை அப்பா
கதை

யானை அப்பா

இந்த கதையில் ஒரு வயதான யானை, அது வாழ்ந்த காட்டிலிருந்து நாம் வாழும் நகரம் ஒன்றிலுள்ள மிருகக் காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது எப்படி என்பதை கூறுவதாகும்

    காட்டில் இந்த வயதான யானைக்குயானைஎன்றே பெயர். இந்த வார்த்தையைக் கேட்டால் கிராமத்தவருக்கு இதயம் நடுங்கும்

அந்த யானை காட்டில் இளமையாக இருந்தபோது, இப்போது இருப்பதைப்போல அடங்கிபோகும் யானையல்ல. குழந்தைகள் அதன்மேல் விளையாட்டாக சவாரி செய்ய முடியாது. மேலும்  ‘யானைஒரு முரட்டான மிருகம். எல்லோரும் ஓரடி தள்ளிதான் நிற்பார்கள். அதைக் காட்டில் பார்த்தாலோ அல்லது அது கிளைகளை முறிக்கும் சத்தம் கேட்டாலோ கிராமத்தவர்கள் தங்களால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகத்தில் ஓடிவிடுவார்கள். ஏனென்றால்யானையைப்போன்ற மற்ற யானைகள் காட்டில் பார்க்கும் மனிதர்களைப் பிடித்து மிதித்து கொன்றுவிடும் அல்லது தன் தும்பிக்கையால் தரையில் ஓங்கியடித்துவிடும் என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது.

யானை மிகப்பெரிய மிருகம். அதனால் வேகமாக ஓடமுடியாது என்று நினைக்க வேண்டாம். அப்படி ஓட வேண்டிய நேரத்தில் ஒரு யானை மனிதைப்போல வேகமாக ஓடும். மிக நீண்ட தூரத்திற்குகூட ஓடும். காட்டில் ஒரு ஆளை சுலபமாக பிடித்துவிடும். மனிதனால் புதர்களுக்குள்ளே புகுந்து ஓடமுடியாது. முள் போன்றவை மனிதனை சுற்றிக்கொண்டு போக வைக்காது . ஆனால் யாரையாவது யானை துரத்தும்போது அது எந்த புதருக்குள்ளும் நுழைந்து மனிதன் ஓடுவதைவிட வேகமாக ஓடி பிடித்துவிடும்

      நமதுயானைதன் மனைவியுடனும் தன் இரண்டு பிள்ளைகளுடனும் காட்டின் அழகான பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்தது. அது வயதானதாகும் வரை அங்கே வாழ்ந்தது. ஒரு அழகான நதி அந்த காட்டில் ஓடிக் கொண்டிருந்தது. மழை காலத்தில் மிருகங்கள் தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும் அந்த நதி உதவியது. மலைகளுக்வகு இடையில் உள்ள பள்ளத்தாக்குகளில் நிறைய மூங்கில் மரக்கூட்டம் வளர்ந்திருந்தது. யானையும் அதன் குடும்பமும் மூங்கில் மரங்களை முறித்து தங்களுக்கு உணவாக எடுத்துக் கொள்ளும். மென்மையான உச்சியிலிருக்கும் இலைகளை நிறைய சாப்பிடும். குட்டி யானைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். மலைப்பகுதியில் நிறைய புளிய மரங்கள் இருந்தன. புளியங்காய் பழுக்கும்போதுயானையும் அதன் சிறிய குடும்பமும், மற்ற எல்லா யானைகளும் இரவும் பகலும் அந்த மரங்களுக்கு கீழே தங்கியிருக்கும். மரங்களில் கிளைகளை முறித்து பழுத்த புளியம்பழங்களையும் வேண்டிய அளவுக்கு உண்ணும்

 

       ‘யானைக்கு இரண்டு அழகான தந்தங்கள் இருந்தன. ஆனால் அதன் மனைவிக்கு ஆறு அங்குலம் தந்தங்களே இருந்தன. ஏனெனில் பெண் யானைகளுக்கு நீண்ட தந்தங்கள்  இருப்பதில்லை

 

      ‘ யானைக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் : முதல் பிள்ளைக்கு பத்து வயது. ஆனால் தந்தங்கள் வளராத அளவுக்கு சின்னப்பிள்ளை. அதன் பெயர் ஹத்தி. இரண்டாவது பிறந்து ஒரே மாதமான குட்டி யானை

 

    புதிதாக பிறந்த தன் சகோதரனைப் பார்க்கும்போது ஹத்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் குட்டி இருந்தது. உடல் முழுவதும் முடிகள் இருந்தன. அது உன் சகோதரன்குட்டிஎன்று ஹத்தியின் அப்பா அம்மா கூறும்வரை அது ஏதோ வித்தியாசமான ஒன்று என நினைத்திருந்தான் ஹத்தி

 

     ஒரு மாதத்தில் குட்டி ஒரு குறும்பான யானைக்குட்டியாக ஆனது. ஹத்தி பார்க்காதபோது குட்டி தன் அம்மாவின் கீழே பதுங்கியிருந்து ஹத்தியின் வாலைப்பிடித்து இழுப்பான். ஹத்தி கோபமானால் உடனே பின்னால் ஓடிப்போய் விடுவான். குட்டி மூங்கில் இலையையோ மற்ற இலைகளையோ உண்ண முடியாத அளவுக்கு குட்டிக்குழந்தை. பழங்களைக்கூட உண்ண முடியாது. குட்டி தன் அம்மாவிடம் பாலைக் குடிப்பான். ஹத்தியை தொந்தரவு செய்வான். ஆனாலும் ஹத்திக்கு குட்டியிடம் நிறைய பாசம். தன் பெற்றோரைவிட ஜாக்கிரதையாக கொன்று தின்னும் புலிகளிடமிருந்து பாதுகாத்து வந்தான். அவன் மூன்றடி உயரம்கூட இல்லை

 

       குட்டி தன் அப்பாவையும் சீண்டுவான். அப்பாவின் காலடியில் சுற்றிச்சுற்றி விளையாடுவான். அப்பாவின் வால் குட்டிக்கு எட்டாத உயரத்தில் இருக்கும். ஆனாலும் குட்டி அப்பாவின் தும்பிக்கையைப் பிடித்துக்கொண்டு தொங்குவான். அதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கும். குட்டியின் அப்பா பெரிய மிருகம். ஆனாலும் கோபம் வரவில்லை. தன் குட்டியை அது மிகவும் நேசித்தது. எப்போதுமே அன்பாக மென்மையான மனதுடன் இருந்தது.

 

இந்த நேரத்தில் கல்கத்தா மிருகக்காட்சி சாலையிலிருந்து காடுகளை பாதுகாக்கும் அரசாங்க அதிகாரிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்தான் தலைமைப் பாதுகாவலர். ஒரு யானையைப் பிடித்து மிருகக்காட்சி சாலைக்கு கொடுக்குமாறு அக்கடிதம் கூறியது. கல்கத்தாவிற்கு அனுப்புவதற்கு முன்பே அதை பழக்கி அனுப்ப வேண்டும். அது குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு பழக்க வேண்டும் என்றும் அக்கடிதம் கூறியது. அதை தலைமை அதிகாரி ஏற்றுக்கொண்டு, வனப்பாதுகாவலருக்கு சொல்லி கட்டளையிட்டார். இந்த வனப்பாதுகாவலர் தலைமை அதிகாரிக்கு கீழே வேலை செய்பவர். காட்டின் ஒரு தனிப்பகுதிக்கு பொறுப்பாளர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர். அவருக்கு கீழே பல பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். காட்டைப் பாதுகாக்கவும், யாரும் மரங்களை வெட்டாமலும் வன உயிர்களை வேட்டையாடாமலும் பார்த்துக்கொள்வார். இதேபோல பல வனக்காவலர்கள் எல்லா காட்டிலும் இருப்பார்கள்

 

       ஆக, யானையைப் பிடிக்கச்சொல்லி உத்தரவு பெற்ற வனக்காவலரின் பெயர் ராம். தன் பணியை அவர் செய்யத் தொடங்கினார். அவர் தன் பணியாளர்களை காட்டு மனிதர்களிடம் கேளுங்கள் என்று கூறினார். காட்டு மனிதர்கள்கரும்பர்கள்என்று அழைக்கப்பட்டனர். காட்டின் ஒரு பகுதியில் வாழ்பவர்கள். யானைகள் வழக்கமாக சுற்றும் இடங்களையெல்லாம் கேட்டு அந்த இடங்களிலெல்லாம் பொறி வைக்க நினைத்தார் அந்த வன அதிகாரி. இந்த கரும்பர்கள் காட்டிலேயே பிறந்து காட்டிலேயே வாழ்பவர்கள். காட்டு விலங்குகளைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள்

 

       அவர்கள் ஒரு அதிகாலையில் யானைகளின் வழித்தடங்கள் மற்றும் பொறி வைப்பதற்கான சரியான இடங்களைத் தேடுவதற்கு சென்றனர். மாலையில் அவர்கள் நற்செய்தியுடன் திரும்பினர். யானைக்கூட்டம் செல்லும் மூன்று வழித்தடங்கள் கடந்து வந்தனர். அந்த தடங்கள் காட்டில் ஓடும் சிறு நதிக்கு செல்லும். அங்குதான் பெரிய மிருகங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு இருமுறை நீர் குடிக்க வரும்.

 

இதைப்பற்றித் தெரிந்ததும் ராம் தன் பணியாளர்கள் அனைவரையும் சில கரும்பர்களையும் சேர்த்துக்கொண்டார். மூன்றில் முதல் வழித்தடத்தை நோக்கி சென்றனர். சரியாக வழியின் நடுப்பகுதியில் நீண்ட குழியை வெட்டச்சொன்னார் ராம். அது 12 அடி ஆழம் 20 அடி நீளம். அந்த. வழியினுடைய அகலத்திற்கு குழியும் 10 அடி அகலம் கொண்டது.

 

   குழி வெட்ட பல நாட்கள் ஆயின. ஏனெனில் மண்ணைத் தோண்டியெடுத்து சிறிது தூரத்தில் கொட்டியதில் நேரம் அதிகமானது. இது ராமின் தந்திரமான திட்டப்படி நடந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜாக்கிரதையாக அமைதியாக பணியை முடித்தனர். யானைகளுக்கு பொறி வைத்திருப்பது  தெரியாத அளவுக்கு பார்த்துக்கொண்டனர்

 

ஒருவழியாக ஒரு பெரிய குழி தயாரானது. எங்கும் பொடிமண் இல்லாமல் நேர்த்தியாக இருந்தது

 

    ராம் தன் பணியாளர்களை உதிர்ந்த மற்றும் காய்ந்த இலைகளை அக்குழியில் போட வைத்தார். அது மூன்றடி உயரம்வரை நின்றது. மூலை முடுக்கெல்லாம் நிரப்பப்பட்டது. பின்னர் அவர்கள் மூங்கில்களை வெட்டிப்பிளந்து அதைவைத்து ஒரு நீண்ட தட்டியைக் கட்டி குழியை இடைவெளியின்றி மூடினர். அதன்மேல் சில புற்களையும் பூண்டுகளையும் போட்டு பரப்பினர். மூங்கில் தட்டி வெளியே தெரியாத அளவுக்கு பரப்பினர். திறமையாக இப்பணி முடிக்கப்பட்டது. பின்னர் குழி என்று தெரியாதவாறு எல்லா ஜோடனைகளும் செய்யப்பட்டன. அவ்வழி முன்பிருந்ததைப் போன்றே இருந்தது

 

        கடைசியாக யானைகளைக் கவர்ந்திழுப்பதற்கு மூங்கில் தட்டியின் மேல் இரண்டு தோண்டியளவு புளியம்பழங்களைக் கொட்டி வைக்கச் சொன்னார் ராம்

 

யானைகள் இந்த வழியே கடந்து போகும். புளியம்பழக் குவியலைப் பார்க்கும். அதை சாப்பிட வரும். யானையின் உடல் எடையை மூங்கில் தட்டியால் தாங்க முடியாது. முதல் மிருகம் ஏறும்போதே சட்டென தட்டி உடைந்துபோகும். யானை குழிக்குள் விழுந்து மாட்டிக்கொள்ளும். இவ்வாறெல்லாம் நடக்கும் என்று ராம் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார். ராம் குழியின் உள்ளே நிறைய காய்ந்த உதிர்ந்த இலைகளைப் போட்டு வைத்தார். இது மெத்தைப்போன்று மென்மையாக இருக்கும். யானை விழும்போது அடிப்படாமல் தாங்கும். மற்றபடி, யானை பெரிய மிருகம் என்பதால் பனிரெண்டடி உயரத்திலிருந்து விழும்போது யானையின் கால் முறிந்து போகும்

 

     இறுதியில் எல்லாம் தயார். கடைசியாக பொறியில் ஏதாவது தவறு இருக்கிறதா என பார்வையிட்டார் ராம். பின்னர் தன் பணியாட்களுடன் குடியிருப்புக்கு சென்றார்.கரும்பர்கள் யானை மாட்டிக்கொண்டது என்று கூறும் வரை அமைதியாக காத்திருக்கலாம் என்று நினைத்தார். அவர்கள் நெடுநாள்வரை காத்திருக்கவில்லை

 

       இரண்டு இரவுகளுக்கு பின்னர், ‘யானையும் அதன் குடும்பமும் பொறி வைக்கப்பட்ட வழியிலே நடந்து வந்தன.      

 

        வழக்கமாக யானைகள் காட்டில் சுற்றும்போது யானையின் மனைவி முன்னால் போகும். ‘குட்டிஅதன் பின்னே போவான். பிறகு ஹத்தி. கடைசியாகயானை‘. அது பலமான யானை. தன் குடும்பத்தின் பாதுகாவலன். அந்த ஆண்யானை குடும்பத்தின் பின்பக்கமாக வரும் ஆபத்தை தடுக்கவல்லது.

 

பெரிய யானைகள் முன்னால் நடக்கும்போது பின்னால் வரும் யானைக்குட்டிகளை காட்டுப்புலிகள் திடீரென தாக்கும். அதனால்யானைபின்னால் செல்கிறது

 

       இவ்வாறாக யானைகள் போகும்போது அம்மா யானை ஒரு மூலையில் திரும்பி பொறி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தது. அது மூங்கில் படலின்மேல் கால் வைத்தது. ஏதோ ஒரு ஆபத்து உள்ளதென உணர்ந்ததும் சட்டென நின்றது. குட்டியின் தலை அம்மாவின் பின்னங்காலில் இடித்தது. சந்தேகத்தில் முன்பக்கம் கவனமாகப் பார்த்தது. ஏதும் பிரச்சனையில்லை என்பதாக முதலில் தெரிந்தது. ஆனால் அப்போது அந்த புளியம்பழக் குவியல் கவர்த்திழுத்தது. பெண் யானை புளியம்பழங்களை விரும்பியது. அருகில் எந்த புளியமரமும் இல்லாதபோது இங்கு எப்படி புளியம்பழங்கள் வந்தன என ஆச்சரியப்பட்டது பெண் யானை.

 

      அதற்குள்குட்டிஅம்மாவின் கால்களுக்கு இடையில் புகுந்து முன்னே புளியம்பழங்களை நோக்கி ஓடினான். ஆனால் அதை சாப்பிடக்கூடிய வயதில்லை அவனுக்கு. குட்டிக்கு புளியம்பழங்கள் மேல் கொள்ளை ஆசை. அதனால் அவன் முன்னால் ஓடி வந்தான். ஆனால் அதற்கான பலனை அவன் பெறப்போகிறான்

 

        அவன் சின்னவனாக இருந்தாலும் முன்னூறு பவுண்டு எடையுள்ளவன். அதையே அந்த மெல்லிய மூங்கில் தட்டியால் தாங்க முடியாது. அங்கே படல் உடையும் சத்தம் கேட்டது. குட்டி குழிக்குள் விழுந்தான். பெண் யானையின் பார்வையிலிருந்து மறைந்தான்.

 

     ஒருசில நொடிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்துபோய் நின்றது பெண்யானை. அது மூங்கில் தட்டியின் ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. குட்டி உள்ளே விழுந்து கிடந்தான். அவன் பயத்தில் கத்திக்கொண்டிருந்தான். தன் அம்மாவை மேலே பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

 

குட்டியின் அம்மாவுக்கு வெறிப்பிடித்துக் கொண்டது. பயத்திலும் கோபத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் பயங்கரமாக பிளிறியது

 

      தன் அம்மா பிளிறுவதைக் கண்டு பயந்து ஓடிப்போய் ஒரு மரத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொண்டான் ஹத்தி. அதே நேரம்யானைதன் மகனையும் மனைவியையும் ஏதோ ஒரு புலி தாக்கிவிட்டதோ என்று நினைத்தது. உடனே முன்னோக்கி ஓடியது. ஓடிய வேகத்தில் குழியில் விழுந்திருக்கும். ஆனால் அதன் மனைவியானை தன் தும்பிக்கையால்யானையைப் பிடித்துக்கொண்டது. ‘யானைதன் குட்டி மகனுக்கு என்ன நடந்தது என பார்த்தது. அதுவும் கோபமடைந்து செய்வதறியாமல் திகைத்தது. அதன் பிளிறலும் அதனுடைய மனைவியின் பிளிறலுடன் சேர்ந்தது. குழியில் குட்டியும் கத்திக் கொண்டிருந்தான். இந்த சத்தங்கள் காட்டையே உலுக்கின

 

      அந்த சத்தங்கள்  தூத்திலிருக்கும் ராம் மற்றும் அவனது பணியாட்களின் உறக்கத்தைக் கலைத்தது. ஒரு யானை மாட்டிக்கொண்டது, நாம் அதிர்ஷ்டம் பெற்றவர்கள் என்று நினைத்துக்கொண்டனர்

 

      அதே நேரம் தாயும் தந்தையுமான பெரிய யானைகள் இரண்டும் தங்கள் மகனைக் காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடைந்ததைக் கண்டு மேலும் நம்பிக்கையற்று போயின

 

    யானை முட்டிப்போட்டு தன் பலமான தும்பிக்கை, தந்தங்கள் மூலம் தன் மகனைக் காப்பாற்ற நினைத்தது. குழியின் மேலே மூடியுள்ள தட்டியைத் தகர்த்தது. முட்டிப்போட்டு காப்பாற்ற முயன்றபோது மண் சரியத் தொடங்கியது. ‘யானைஇரண்டாம் முறை குழியின் உள்ளே விழுந்திருக்கும்

 

      தன் பங்குக்குயானையின் மனைவி சில மூங்கில்களை முறித்து குழிக்குள் போட்டது. மூங்கில்களின் ஒரு முனை குழிக்கு மேலேயிருக்கும் வகையில் போட்டது. குட்டி தன் தும்பிக்கை மூலம் மூங்கிலின் ஒரு முனையைப் பிடித்துக்கொள்வான் என நம்பியதுயானையின் மனைவி. பின்னர் அப்படியே பிடித்து வெளியே இழுத்துவிடலாம் என நினைத்தது. ஆனால் குட்டிக்கு தன் தாயின் திட்டம் புரியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் குழந்தை

 

      இரவு முழுவுதும் இந்த பெற்றோர் தன் மகனைக் காப்பாற்ற பல முயற்சிகள் செய்து தோற்றனர். ஆனால் தொடர்ந்து முயற்சி மேல் முயற்சி செய்தனர். ஆனால் கிழக்கு வானில் சூரியனின் கதிர்கள் தோன்றின. காலைப்பொழுது புலரப்போகிறது என யானைகள் அறிந்தன

 

      ‘ யானைமறுபடியும் குழியின் நுனியில் மண்டியிட்டு தன் முழு தும்பிக்கையை உள்ளே நீட்டியது. அது குட்டியின் தும்பிக்கை நீட்டியும்கூட தொட முடியாமலிருந்தது. இடையில் சற்று இடைவெளியிருந்தது. அங்கே பிடித்துக் கொள்ளவும் ஏதுமில்லை. ஆனால் குழியிலிருந்து மேலே தூக்கும்போது கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுமளவுக்கு சக்தி குட்டிக்கு கிடையாது. ஏனெனில் அவன் மிகவும் குழந்தை. பலவீனமானவன்

 

     மலைகளுக்குமேல் சூரியன் எழுந்து வந்தது. ‘யானைதன் எல்லா முயற்சிகளும் தோல்வியுற்றதை நினைத்தது. அது நினைப்பதை தன் மனைவியிடமும் கூறவில்லை. அது பெண்யானையை இவ்வாறு செய்யாதே என்று கத்திக்கூற வைத்தது. ‘யானைகடைசியாக ஒருமுறை தன் குடும்பம், காடு போன்றவற்றைப் பார்த்துக்கொண்டது

 

      அடுத்த நொடி யானை தானே குழிக்குள் குதித்தது. இப்போது தன் மகனைக் காப்பாற்றுவதுயானைக்குமிகவும் சுலபம். தன் தும்பிக்கையில் குட்டியை தாய் யானையால் பிடித்துக் கொள்ளுமளவுக்கு, தலைக்குமேலே தூக்கி வெளியே விடுமளவுக்கு தூக்கியது. கடைசியாக அவர்களது செல்ல மகன் காப்பாற்றப்பட்டான். ஆனால் அதற்கான விலைதான் என்னே..!

     ‘உன்னை எப்படி காப்பாற்றுவது.?’ என்றுயானையின் மனைவி கேட்டது. அப்போது அதன் குரலில் பயமும் நடுக்கமும் கண்களில் நீரும் தென்பட்டன

 

      ‘ அய்யோஎன்னால் வெளியே வர முடியாது. ஆனால் பல நாட்களுக்கு நம்மகன் நலமாக இருப்பான். அவனைக் காப்பாற்றியதற்கு நான் பெருமைக் கொள்கிறேன்என்று கூறியதுயானை‘.

 

       அப்போது மனிதர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்களைத் தாக்கி கொன்றுவிடலாம் என்று பெண்யானை நினைத்தது.

 

 ஆனால்யானைஅழுத்தமாகக் கூறியது, அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன. உன்னை சுட்டுவிடுவார்கள். ஹத்தியையும் குட்டியையும் கூட சுட்டு விடுவார்கள். இங்கிருந்து உடனே போய்விடுங்கள். என்னைப்பற்றி கவலையே தேவையில்லை. குட்டி பெரியவனாக வளரும்போது அவனது அப்பா அவனுக்காக என்ன செய்தேன் என்று கூறுஎன்றதுயானை‘. 

 

      வேதனையில் அழுதுக்கொண்டு தன் மகன்களைக் கூட்டிக்கொண்டு சென்றதுயானையின் மனைவி. பிறகு சில நிமிடங்கள் கழித்து ராம் மற்றும் அவனது குழுவினர் அங்கு வந்தனர். குழியிலுள்ள பெரிய யானையைப் பார்த்தபோது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. யானையை விற்கும்போது அரசிடமிருந்து ஏதேனும் வெகுமதி கிடைக்கும் என நினைத்தனர்

 

      யானையை பதினைந்து நாட்கள் பட்டினி போட்டனர். ‘யானையால் நிற்க கூட முடியவில்லை. பிறகு யாரையும் திருப்பித் தாக்க முடியாது என்ற நிலை வந்ததும் கயிறுகள் மற்றும் நன்கு பழக்கப்படுத்தப்பட்ட நான்கு யானைகள் ஆகியவற்றின் உதவியுடன் குழியிலிருந்து யானையை வெளியே தூக்கினர். ஆனால் தங்களைப் பாதுகாக்க வேண்டி முன்னேற்பாடாக அதன் கால்களிலும் இடுப்பிலும் சங்கிலிகளைப் பூட்டியிருந்தனர்

 

        இப்படியாக பல மாதங்களாக யானை கட்டப்பட்டிருந்தது. சாகாமலிருப்பதற்கு தேவையான உணவை மட்டும் தந்தனர்

 

    இவ்வாறாக பல நாட்களாகப் பழக்கப்படுத்தப்பட்டு சகஜமாக அனைத்தையும் ஏற்றுக்கொண்டதுயானை‘.

 

        இப்போதும் அதன் கால்களில் பெரிய இரும்பு சங்கிலிகள் இருக்கின்றன

 

        ஆறாயிரம் ரூபாய்க்கு அரசாங்கத்திடம் விற்கப்பட்டதுயானை‘. ராமுக்கும் அவனுக்கு உதவியவருக்கும் முன்னூறு ரூபாய் வெகுமதி கிடைத்தது

 

      யானை ஒரு சிறப்பு பெட்டியில் அடைக்கப்பட்டு ரயிலில் கல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே ஒரு மிருகக்காட்சி சாலையில் விடப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளை சவாரி தூக்கிச் செல்லும் விளையாட்டு பொருளாக மாறியது

 

      பல வருடங்களாக அது இங்கேயே இருக்கின்றது. பலருக்கும் பிடித்தமான யானையாக மாறிவிட்டது. குழந்தைகள் அதை பெரிதும் விரும்பினர். ‘யானைக்கும் குழந்தைகளை தன் முதுகில் தூக்கிக் கொண்டு போவது பிடித்திருந்தது

 

        அது குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அதன் கண்களில் சிறிது சோகம் தென்படும். ஒருவேளை அதன் மனமும் ஆன்மாவும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் போய்விட்டு வரலாம். அதற்கு பிடித்த காட்டுக்கும் பிரிந்த குடும்பத்திடமும் சென்று வரலாம். அது தன் மனைவியையும் ஹத்தியையும் குட்டியையும் பார்க்கலாம். குட்டி பெரியவனாக வளர்ந்து மகிழ்வுடனும் பாதுகாப்பாகவும் இருக்கலாம். வயதான யானை ஒரு பெருமூச்சு விட்டது. ஆனால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற தன்னை தியாகம் செய்ததை நினைத்து மகிழ்ந்தது

 

     அங்கே காட்டில் அதன் மனைவி தன் கணவனையே நினைத்துக் கொண்டிருந்தது. என்றும் நினைக்கத் தவறியதில்லை. ஹத்தியும் குட்டியும் தங்கள் தந்தையைப் போன்றே பெரிதாக பலமாக தயாள குணத்துடன் நடந்து கொள்கின்றனர். யானைகள் எப்போதும் எதையும் மறப்பதில்லை.

 

முற்றும்.

– கென்னத் ஆண்டர்சன். (ஆங்கில மூலம்)

– கார்த்தி டாவின்சி. ( தமிழாக்கம்)

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply