சாலைகளில் ஒட்டு வேலை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் நெடுஞ்சாலை பொதுபணி துறை மற்றும் நகராட்சி அலுவலர்களும், ஒப்பந்தகாரர்களும்.
சாலைகளில் ஒட்டு வேலை செய்வதாக கூறி அரசு துறை அலுவலர்கள் பெரும் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
சாலைகள் போடப்பட்டால் மீண்டும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அது சேதமடையாமல் இருக்க வேண்டும் என்றும்
இடையில் பழுது ஏற்பட்டால் அந்த சாலையை போட்ட ஒப்பந்தகாரர்களே சரி செய்து தர வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
ஆனால் இவை எல்லாம் காற்றில் பறக்க விடப்படுகின்றன. மன்னார்குடியில் காளவாய் கரையில் இருந்து
கீழப்பாலம் வரை நெடுஞ்சாலை துறை சாலை அடிக்கடி போடப்படுகிறது. ஆனால் சாலை ஒரு மழைக்கு கூட தாக்குபிடிப்பது இல்லை. உடனே குண்டு குழியுமாக மாறிவிடுகிறது, சாலைகள் தரமாக போடுவதில்லை. பழைய சாலையை அகற்றிவிட்டு போடுவதில்லை, மழை நீர் வடியும் வகையில் சரியான வாட்டம் அமைப்பதில்லை.
இவற்றை எல்லாம் எந்த அதிகாரியும் கண்காணிப்பதில்லை, இதில் ஒரு புறம் கொள்ளையடிப்பதோடு,
சாலைகள் மீண்டும் குண்டும் குழியும் ஆனவுடன் அந்த ஒப்பந்ததாரர்களை சரி செய்ய சொல்லாமல்
ஒட்டு வேலை செய்வதாக கூறி அதிலும் பெரும் கொள்ளை நடக்கிறது.
முக்கிய VIP க்கள் வந்தால் அடிக்கடி இந்த ஒட்டு வேலை செய்யப்படுகிறது. 2 நாள்களுக்கு முன்னர் கூட அமைச்சர் மன்னார்குடி வந்த போது, இந்த நெடுஞ்சாலை துறை சாலையில் ஒட்டு வேலை செய்தது. பல இடங்களில் விட்டு, விட்டு பெயரளவுக்கு இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த மழைக்கு இது தாங்காது, இதை பார்த்தாலே அனைவருக்கும் தெரியும். அதே போல் சமீபத்தில்
மன்னார்குடி நகராட்சியில் 9 லட்சத்துக்கு மேல் நகராட்சி சாலையான பைபாஸ் சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஒட்டு வேலை செய்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டு பணியும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.
அவை எங்கு போடப்பட்டது? இவ்வளவு தொகை தேவையா? என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம். இந்த ஒட்டு வேலைகளில் அலுவலர்களுக்கும், ஒப்பந்தகாரர்களும் பெரும் அளவு பங்கு போட்டு கொள்கின்றனர். இதனால் அலுவலர்கள் இதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இப்படி தான் பெரும்பாலான அரசு நிதி வீணடிக்கப்படிகிறது. நேர்மையாக பணிகள் நடக்க தலைமை செயலாளர்
பல உத்தரவு பிறப்பித்தாலும் இவற்றை எல்லாம் மாவட்ட ஆட்சியர்களோ, உயர் அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை.
—
திரு. ஆனந்த்ராஜ்,
அமமுக நகர்மன்ற செயலாளர்,
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்,
மன்னார்குடி.