“காற்றோடு போனதா தமிழக அரசின் அறிவிப்பு?” என அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுசெயலாலர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன அறிவிப்பு.
அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளவற்றை இங்கு பகிர்கிறோம்.
பாதுகாப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கபட்ட கொள்ளிடம் பகுதியில் விவசாய நிலங்களின் வழியாக கயில் குழாய் பதிக்கும் பணிகள் மேற் கொள்ளப்படுவது கண்டனத்திற்குரியது.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நோண்டியுள்ள சுமார் 20 எண்ணெய் கிணறுகளில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாந்தூருக்கு எரிவாயுவை எடுத்து செல்ல 2 ஆண்டுகளுக்கு முன் விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் செய்ல்படுத்தப்பட்டது.
கெயில் நிறுனம் மேற்கொண்ட அந்த பணிக்கு விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், சூழியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பினால் அப்போதைக்கு நிறுத்தபட்டது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழையபாளையம் வரையிலான புதிய பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாய் குழாய் பதிக்கும் பணிகளை கெயீல் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த பகுதிகளையும் உள்ளடக்கிதான் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் திரு.பழனிசாமி அவர்கள் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தார்.
இப்போது அங்கே விளை நிழங்களில் 5 அடி ஆழத்திற்கு தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்? இதெற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே “பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை இன்னும் வகுக்கபடவில்லை” என்று தமிழக அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் பழனிசாமி வேளாண் மண்டலத்திற்கான அரைகுறை அறிவிப்பை வெளியிட்ட போதே நாம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிருபிக்கும் வகையில் தான் தற்போதைய செய்ல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதையும், ஆறுகளில் இருந்து மணல் சுரண்டப்படுவதையும் தடுப்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்.
அருள்பாண்டியன், பூவனூர்,
மன்னார்குடி