Home>>இந்தியா>>குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதலுக்கு கடுமையான கண்டனங்கள்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதலுக்கு கடுமையான கண்டனங்கள்.

குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி போடுதல் என்ற இந்திய அரசின் செயலுக்கும், அதற்கு துணை போகும் தமிழக அரசுக்கும் கடுமையான கண்டனங்கள்.

குழந்தைகளுக்கு இயல்பாக வளரும் எதிர்ப்பு ஆற்றலை, இது மடைமாற்றும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அரசுகளின் இச்செயலை நினைக்கும் போது உள்ளம் குமறுகிறது.

இக்குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சம் வருகிறது.

“கருநெடுங் குவளையும்
ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும்
தனித்துற துயரம்
ஐயமின்றி அறிந்தன
போலப்
பண்நீர் வண்டு பரிந்தினைந்து ஏங்கிக்
கண்ணீர் கொண்டு
காலுற நடுங்க”–

சிலப்பதிகாரம் 13:184.

அதாவது “குவளை, ஆம்பல், தாமரை முதலிய மலர்கள், இந்த பூக்களின் தேனை உண்டு மகிழ்ச்சியாக உள்ள வண்டுகள், அந்த வழியில் கோவலனும், கண்ணகியும் மதுரையை நோக்கி சென்று கொண்டிருப்பதை பார்த்து, அவர்கள் இருவருக்கும் நடக்க போகும் துண்பத்தை எண்ணி மலர்களும், வண்டுகளும் கண்ணீர் விட்டு வருத்தப்படுவதாக” தமிழ்ப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுவார்.

இன்றைய அரசுகளின் இச்செயலை நினைக்கும் போது நமக்கும், இந்த உணர்வே மேலோங்குகிறது. இருந்த போதிலும் தமிழக மக்களை திரட்டி இதற்கு எதிராக தமிழ்த்தேசிய பேரியக்கம் போராட்டம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

மக்களிடம் இக்கருத்தை தீவிரமாக கொண்டு சேர்த்து, அன்று கொல்லன் செய்த தவறை உணராது தீர்ப்பளித்த பாண்டிய நெடுஞ்செழியன் தானும் துயரம் பட்டு, கண்ணகியையும், மதுரை மக்களையும் துயரப்படுதியது போல் அல்லாமல், தமிழக அரசுக்கு நயமாக நடக்க போகும் ஆபத்தை எடுத்து கூறி, குழந்தைகளை காப்பாற்றுவோம்.

மறுபக்கம் மக்களை திரட்டி போராடுவோம்.


செய்தி:
திரு. விசுவநாதன் கரிகாலன்.

Leave a Reply