Home>>அரசியல்>>மாணவர்களுக்கும், உடன் வருபவர்களுக்கும் E-Pass தேவையில்லை என முதல்வர் அறிவிக்க வேண்டும்
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

மாணவர்களுக்கும், உடன் வருபவர்களுக்கும் E-Pass தேவையில்லை என முதல்வர் அறிவிக்க வேண்டும்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.டிடிவி. தினகரன் அவர்கள் E-Pass வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொண்டு இன்று (14/08/2020) twitter தளத்தில் தனது கருத்தை கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள E-Pass நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

இதற்காக E-Pass கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால், அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும், மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் E-Pass தேவையில்லை என தமிழக முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்சனையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ, அலட்சியம் காட்டுவதோ கூடாது.


— அருள்பாண்டியன், பூவனூர்,
மன்னார்குடி

Leave a Reply