Home>>உலகம்>>ஈழம்>>முள்ளிவாய்க்கால் நினைவு மாதத்தில் ‘பொய்யாவிளக்கு’
the-lamp-of-truth
ஈழம்உலகம்கனடாகாணொலிகள்சமூக பணிசெய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு மாதத்தில் ‘பொய்யாவிளக்கு’

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசபடைகளால் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் நினைவு கூர்ந்து வருகிறோம். இப்பேரழிவு நிகழ்ந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் எமக்கான நீதி கிடைக்காமல் தொடர்ந்தும் போராடி வருகிறோம். போர்க்குற்றம் மற்றும் இனவழிப்பு செய்த இலங்கை அரசையும் அரச படைகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். அந்த வகையில் எம்மினத்திற்கு நடந்த கொடுமைகளை உலகறியச் செய்வதற்கும் எம் இளம் சந்ததியினர் எம் வரலாறுகளை உரிய முறையில் அறிந்து கொள்வதற்கு முறையான ஆவணப்படுத்தல் இன்றியமையாதது. அந்த வகையில் முள்ளிவாய்க்காலில் எம்மினத்திற்கு நடந்த இனவழிப்பை ” பொய்யா விளக்கு” என்ற ஆவணப்படம் உலகறியச் செய்கிறது.

கனடா, ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கை தமிழரான திரு. தினேஷ் கோபாலின் இயக்கத்திலும் வெண்சங்கு கலைக்கூடத்தின் தயாரிப்பிலும், ஏனைய பலரின் பங்களிப்புடனும் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையின் உண்மை சம்பவங்களை அப்படியே ஒரு ஆவணப்படமாக உருவாக்கியுள்ளனர். கொரோனாவின் தாக்கத்தால் பல மாதங்கள் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்பொழுது திறக்கப்பட்டு இருப்பதால் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ‘பொய்யா விளக்கு’ திரைப்படம் இம்மாதம் 7ம் திகதி முதல் திரையிடப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.
தற்பொழுது உக்கிரனின் ரசியா படைகளால் நடத்தப்படுவது ஒரு இனப்படுகொலை என கூறும் உலகம் எங்கள் மண்ணில் நடந்ததை இனப்படுகொலை என கூற மறுத்து வருகிறது . ஆகவே பொய்யாவிளக்கு போன்ற ஆவணங்களை நாமும் பார்த்து, எம்மிளம் சந்ததியினர் மற்றும் பிறமொழி பேசுபவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களை பார்க்க செய்வதன் மூலம் எங்கள் மண்ணில் நடந்த இனப் படுகொலையை உலகறியச் செய்வோம்.

நன்றி
Dr. Varathan

Leave a Reply