தில்லை நடராசர் திருக்கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரி கடலூர் இந்து அறநிலைய துறை விசாரணை குழு ஆணையரை இன்று 20-06-2022 காலை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளேன்.
திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் அடியார்களுடன் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் உள்ளிட்ட திருமுறை திருப்பாக்களை பாட முயன்ற போது அரம்பர்கள் போல் பாடக்கூடாது, பாடக்கூடாது என்று கூச்சலிட்டுக்கொண்டு கீழே போ என்று மிரட்டியும் சில அடியார்களை நெட்டியும் அவ்வப்போது பக்தர்களை தாக்கியும் வருகிறார்கள் தீட்சிதர்கள்.
வயதான மூத்த சிவனடியார்களோ சிவபக்தர்களோ சென்றாலும் திருமுறைகளை பாட விடாமல் ஒருமையில் பேசி இழிவு செய்து வருகிறார் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் விளக்கி பேசினோம்.
அதிகாரி அமைதியாக எல்லாவற்றையும் கேட்டறிந்தார். நிச்சயம் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றார்.
அதே போல் முருகன்குடி இயற்கை வேளான் செயற்பாட்டாளர் திரு.முருகன் அவர்களும் தனி நபர் கோரிக்கை மனுவை கொடுத்து விளக்கினார். உடன் காட்டுமன்னார்கோயில் தோழர் அருளமுதன் அவர்களும் இருந்தார்.
அமைப்பின் மூலமாக மனுக்கள் கொடுக்கப்பட்டாலும் தனி நபர்களின் கருத்துக்களை கொடுக்கலாம், எல்லா கருத்துக்களையும் அறநிலைய துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
எவ்வித தயக்கமில்லாமல் யார் வேண்டுமானாலும் விசாரணை குழு ஆணையரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனு கொடுக்கலாம், அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
எனவே நம் தில்லை திருக்கோயிலை தீட்சிதர்களின் ஆரிய அரம்ப பிடியிலிருந்து மீட்க இந்து அறநிலைய துறைக்கட்டுப்பாட்டில் அரசு ஏற்க வேண்டும் என்று அனைவரும் கோரி தங்கள் கருத்துக்களை நாளை 21-06-2022 மாலை 3 மணிக்குள் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்
வே.சுப்ரமணியசிவா