Home>>கவிதை>>காதலர்  தினம்
கவிதை

காதலர்  தினம்

கண்கள் பேசும் பாஷையை

மனம்  அறிந்து மனதும் 

மனதும் உணரும் மகரந்த 

சேர்க்கை தான் காதல் 

 

மானிட உலகில் நவயுகம் 

காதலையும் விட்டு

வைக்கவில்லை! 

கலவி என்ற கலை 

கரம் பிடிக்கும் முன்னரே 

ஒத்திகைப் பார்க்கப்படுகிறது. 

 

இதன் விடையாய் 

சாக்கடையும் குப்பைத்  

தொட்டியும் ஒரு 

சிசுவை தன் மடியில் 

தாங்கிக் கொள்கிறது. 

 

இது போதுமோ என்று 

கழிப்பிடத்தில் மலம் ஜலம்

கழித்ததுபோக கருவும் 

கழிக்கப்படுகிறது 

உதிரப்போக்காக। 

 

காதல் என்பது அன்று

நேசத்தில் உரசியது, 

உணர்வின் ரீதியாக! 

நித்திரையில் மட்டும்

உடலை உரசி  

இன்று நிஜத்தில் உரசுகிறது 

காமத்தின் மிச்சமாக காதல்! 

 

காதல் என்பது இரு உள்ளம் 

சேர்வது ஆயுள் வரை, 

 கலவி முடியும் வரை 

சேர்வது காதல் அல்ல மோகம்!

 

சிறுதுளிகளில் 

தீந்து விடுகிறது ச்சீ என்று ,

ஆதலால் இன்று நிறைய 

பிரிவும் ஏற்படுகிறது. 

புரிந்துகொள்வோம் காதல் 

என்பது நேசத்தின் பந்தம் 

நம்  பண்பாடு 

அனுதினம் கொள்வோம் 

நம் நேசகர்களிடம்! 

 

காதல் மூன்று முடிச்சி 

போட்ட பின்பு

தொடர்வோம், தொடுவோம். 

அன்றும் மனதிலே காதலில் மிச்சமாய்  தேகத்தை அது தான் நம்முடைய நேசம்! 

 

காமத்தின் மிச்சமாய் காதலை 

எண்ணாமல் காதலில் மிச்சமாய் 

காமத்தை எண்ணுவோம். 

கல்லறைவரை

காதல் செய்வோம், 

திருமணம் முடித்து 

நம் நேசர்களோடு 

என்பதை மனதில் விதைத்து 

காதலர் தினம் கொண்டாடுவோம் 

கண்களால் உரசி….!

 

இனிய காதலர் தின நல்

வாழ்த்துக்கள்…!!! 

 

நன்றி 

ஆரூர் கவிஞன் தீன், பொதக்குடி.

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply