Home>>அரசியல்>>மக்களை அவதிக்குள்ளாக்கும் புதிய மின் கட்டண உயர்வு
அரசியல்

மக்களை அவதிக்குள்ளாக்கும் புதிய மின் கட்டண உயர்வு

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற காட்டுத்தீ தாக்கிய நிலையில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் வேலையிழந்து பொருளாதார ரீதியில் பின்தங்கி குடும்பங்களை நகர்த்தவே சிரமப்பப்படும் சூழலும் இங்கே அதிகம் இருக்கிறது..
மத்திய மாநில அரசுகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும் சூழலில் மக்கள் இருக்கையில்,
இந்த நிலையில் தமிழக அரசு மக்களின் அன்றாட தேவைகளின் ஒன்றான மின்சாரத்தில் கை வைத்துள்ளது. உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை இந்த நிலையில் உபத்திரம் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலைக்கு மக்கள் எப்போதே வந்து விட்டனர்
மின்சார கட்டணத்தில் அரசு கைவைத்தது “ஷாக் “அடிக்கிறது மக்களுக்கு.
கட்டண உயர்வு அறிவித்து ஒரு மாதம் ஆகிவிட்டது இப்போது தான் செய்தியா என்று படிப்பவர்கள் கேட்பது காதில் விழுகிறது..
கட்டண உயர்வு வந்த சில நாட்களில் மக்கள் அதை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்ற நோக்கில் ,ஆளுங்கட்சி மந்திரிகள் கையில் மைக்கை கொடுத்து வாயில் வருவதை பேசுங்கள் என்று சொல்லி நம்மை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி விட்டார்கள்..
பாவம் அதனால் முதல்வர் தூக்கமும் போய்விட்டது.

மின் கட்டண உயர்வு கடந்த மாதம் அறிவித்தாலும் இந்த மாதம் தான் கட்டணமாய் நம் வீட்டு அட்டைகளை நிரப்பியது..

வீடுகள், சிறுகடைகள் ,தொழில் நிறுவனங்கள் எல்லாம் தற்போது வந்த கட்டணங்களை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுகடை வைத்து இருப்பவர்களின் நிலை தான் மோசம். வாடகை , மின் கட்டணம் என மாத வருவாய் முழுவதுமே தொழிலுக்காக மட்டுமே செலவு ஆகிவிடுகிறது என புலம்பி வருகின்றனர்..
இந்த நிலையில் பழைய , புதிய கட்டணங்கள் உங்கள் பார்வைக்கு :

பழைய கட்டணம் vs புதிய கட்டணம்.
*முதல் 100 யூனிட்கள் வரை எந்தவித கட்டணமும் இல்லை

*101 – 200 யூனிட்களுக்கு முன்பு ரூ.170 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.225 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.
அதாவது,200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதத்திற்கு ரூ 27.50 என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும்.

*201 – 300 யூனிட்களுக்கு முன்பு ரூ.530 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.675 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ 145 கூடுதலாக வசூலிக்கப்படும்..

*301 – 400 யூனிட்களுக்கு முன்பு ரூ.830 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 295 கூடுதலாக செலுத்த வேண்டும்

*401-500 யூனிட்களுக்கு முன்பு ரூ.1,130 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.1,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 595 கூடுதலாக செலுத்த வேண்டும்.

*501-600 யூனிட்களுக்கு முன்பு ரூ.2446 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.2756 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
600 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 310 கூடுதலாக செலுத்த வேண்டும்.

*601-700 யூனிட்களுக்கு முன்பு ரூ.3110 ஆக இருந்தகட்டணம் தற்போது ரூ3660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

700 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 550 கூடுதலாக செலுத்த வேண்டும்

*701-800 யூனிட்களுக்கு முன்பு ரூ.3760 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.4550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
800 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 790 கூடுதலாக செலுத்த வேண்டும்..

*801-900 யூனிட்களுக்கு முன்பு ரூ.4420 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.5550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
900 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 1130 கூடுதலாக செலுத்த வேண்டும்.

*மேலும், 1,001 யூனிட் முதல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என கட்டணம் செலுத்த வேண்டும்.

வீடுகள் தவிர தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் ஏறியுள்ளது.
தொழில், கடைகளின் மின்கட்டண உயர்வு விபரம்
*தற்காலிக இணைப்புக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.12.00
*தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ. 6.50
*அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஒரு யூனிட் கட்டணம் ரூ.7.00
*தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7.50
*கடைகள் வணிக நிறுவனங்களுக்கு ரூ. 8.50
*மாதம் நிலையான கட்டணம் ரூ.550
மாதம் மாதம் இனி மின்சாரத்துக்கும் அந்நிய நிறுவனங்களின் பயன்பாடுகளில்தான்(app) கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டும் என்று படித்தவர்கள் சிலர் புலம்பிகொண்டே “பிக் பாஸ் “கிரிக்கெட் உலகக்கோப்பை போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு தனது வழக்கமான பணிகளை தொடங்கிவிட்டனர்..
அரசும் மக்கள் பழகிவிட்டனர் அடுத்து எவ்வளவு எற்றுவது, தீபாவளிக்கு மதுவை எப்படி 600 கோடிக்கு விற்று பொன்னியின் செல்வன் வசூலை ஒரே நாளில் முறியடிப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டது…
அனாவசியமான ஒரு புதிய பிரச்சனை வந்தால் அத்தியாவசியமான நமது பழைய பிரச்சினைகளை மறந்து விடும் மக்களின் ஞாபக மறதியும் சகிப்புத்தன்மையும்தான் ஆட்சிக்கட்டிலில் உள்ளவர்களின் தவறுகளையும் அநியாயத்தையும் ஊக்குவிக்கிறது.
நமது பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் காணாத வரை இதுபோல இன்னும் பல விலையுயர்வுகளை மக்கள் சந்திக்க நேரிடும்.

-ஆனந்த் ரெய்னா

Leave a Reply