Home>>இந்தியா>>இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்.
இந்தியாகல்விசமூக பணிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்.

மன்னார்குடியில், “இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்” துவங்கப்பட்டு இன்றுடன் 91ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931).

இந்தியாவின் “முதல் நடமாடும் நூலகம்”, 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

முதியோர் கல்வியை இலக்காகக் கொண்டு, எளிய தமிழில், தோட்டக்கலை, தேனீ வளர்ப்பு, குடிசைத்தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் முறைகளைப் பற்றிய குறிப்புகளுடன் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு நடமாடும் நூலகத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.

மன்னார்குடி மற்றும் 12 மைல் சுற்றுவட்டார கிராமவாசிகளின் கல்வி நலனிற்காக கௌமார குருகுலம் நிறுவப்பட்டது. நடமாடும் நூலகத்தின் மூலம் 95 கிராமக் கிளைகளுக்கு இலவசமாக புத்தகங்கள் கொடுத்து வாங்கப்பட்டன. சித்திரை, ஐப்பசி மாதங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறப்பு பள்ளிக்கூடம் மூலம் கல்வி போதிக்கப்பட்டது.

மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றான இந்நடமாடும் நூலகத் திட்டம், பின்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துவக்கப்பட்டு, கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் வித்திட்டது.


செய்தி உதவி:
திரு. இராஜப்பா,
ஆசிரியர்,
தேசிய மேல்நிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply