Home>>அரசியல்>>“காசி தமிழ்ச்சங்கம் பா.ச.கவின் அரசியல் நாடகம்!” – கே. பாலகிருஷ்ணன்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

“காசி தமிழ்ச்சங்கம் பா.ச.கவின் அரசியல் நாடகம்!” – கே. பாலகிருஷ்ணன்

தமிழின் பெயரால் சூழ்ச்சி காசி சங்கமமே சாட்சி!


காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் மிகப்பெரிய அரசியல் நாடகத்தை பாஜகவும், மோடி அரசும் நடத்திக் கொண்டி ருக்கின்றன. தமிழ்நாட்டை குறிவைத்து இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காசிக்கும் தமிழ்மொழிக்கும் இடையே நீண்ட கால உறவு இருப்பதாக அந்த நிகழ்வில் பாஜக வினர் புளகாங்கிதப்பட்டு பேசியிருக்கிறார்கள். இந்தியாவில் எண்ணற்ற வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு அந்தக் காலக் கட்டத்தில் பல மன்னர்கள் செல்வதும், அதன் பொருட்டு கலாச்சார பரிமாற்றங்கள் நடந்ததும் பதிவாகியுள்ளன என்பது உண்மையே. ஆனால், அதையெல்லாம் தங்களது மதவாத அரசியலுக்கு பயன்படுத்துவதும், காசியில் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் திட்டமிட்டு ஒரு சூழ்ச்சிகரமான விழா நடத்துவதும் அதில் பங்கேற்ப தற்காக, 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துச் செல்வதும், இந்த நிகழ்வு இந்திய கலாச்சாரத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் புரிந்து கொள்வ தற்காக என்று கூறிக் கொள்வதும் அப்பட்டமான அரசியல் சுயலாபத்திற்காக நடத்தப்படும் வேலையே தவிர வேறல்ல.

உண்மை நோக்கம் என்ன?

இந்தியா என்பது ஒரே கலாச்சாரம் கொண்ட நாடு அல்ல. பல மொழிகள், பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. இவை அனைத்தையும் ஒற்றைக் கலாச்சார மாக வகைப்படுத்த இவர்கள் முயற்சிக்கிறார்கள். காசியில் நிலவும் கலாச்சார மும் தமிழ்க் கலாச்சாரமும் எப்படி ஒரே வகைப்படும்? இந்தியா என்பது ஒரே நாடு, ஒரே மதம் என்றும் அது இந்து கலாச்சாரமே என்றும் வலிந்து திணிப்ப தற்கான ஓர் ஆபத்தான முயற்சிதான் காசி தமிழ்ச் சங்கமம். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் இருக்கிறார், அம்மாநில ஆளு நர் இருக்கிறார், பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து பாஜக தலைவர் அண்ணாமலையும் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பங்கேற்றிருக்கிறார்கள். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள் என்றால், அதில் தமிழ்நாட்டு அரசாங்கமோ அல்லது தமிழக முதலமைச்சரோ இல்லாமல் எப்படி நடத்துகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டு அரசுக்கு இதில் சம்பந்தமில்லை; மாணவர்களை அழைத்துச் செல்வதில் தமிழக கல்வித்துறைக்கு சம்பந்தமில்லை; தமிழ்நாட்டில் மொழி வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை இருக்கிறது, அந்த துறைக்கும் இதில் தொடர்பு இல்லை. ஆனால் ஒன்றிய ஆட்சியாளர்களும், பாஜகவினரும் தாங்கள் விரும்பிய படி தமிழகத்திற்குள் புகுந்து, தமிழக கல்வித்துறையில் எதை வேண்டுமா னாலும் செய்யலாம் என்ற அத்துமீறலின் அப்பட்டமான வெளிப்பாடுதான் காசி தமிழ்ச் சங்கமம்.

உண்மையிலேயே, காசியில் தமிழ்ச் சங்கமத்தை அதிகாரப்பூர்வமாக அவர்கள் நடத்த விரும்பியிருந்தால் அல்லது தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பற்று இருந்திருந்தால், தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநில அரசுகளையும் கூட்டாக கலந்தாலோசித்து பங்கேற்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையில் தமிழக கல்வித்துறையின் மாணவர்களை தமிழ்நாடு ஆளுநரின் பின்புலத்துடன் அழைத்துச் செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. கலாச்சார பரிமாற்றம் என்ற பெயரில் தமிழ்நாடு மாணவர்களை அழைத்துச் சென்று ஒருமாத காலத்திற்கு பயிற்சி என்ற பெயரில் இந்துத்துவா சிந்தனைகளை – ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை அவர்கள் மனதில் விதைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்; ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு ஆள் பிடிப்பதுதான் இந்த சங்கமத்தின் இலக்கு. இந்த நிகழ்ச்சிக்கு செலவாகும் மிகப்பெரிய அளவிலான தொகையை யார் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பது மற்றொரு முக்கிய கேள்வி. ஒன்றிய அரசு இதை நடத்துகிறது என்றால், ஒன்றிய அரசே செலவழிக்கிறது என்றால், தன்னிச்சை யாக செய்ய முடியாது; மாநில அரசுடன் கலந்து பேசித்தான் செய்ய முடியும். மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் இவர்களே எப்படி நடத்த முடியும்? ஒன்றிய அரசின் நிர்வாகமே ஆர்எஸ்எஸ்-ன் கையாளாக செயல்படுகிறது என்பதன் வெளிப்பாடுதான் இது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து இசையமைப்பாளர் இளைய ராஜாவை அழைத்துச் சென்று பாட வைத்திருக்கிறார்கள். அவர் அங்கு பாடிய பாடல்கள் முற்றிலும் பக்தி மார்க்கம் சார்ந்தவை. இதுதான் தமிழ்க் கலாச்சாரம் என்கிறார்களா?

அபத்தத்திலும் அபத்தம்

அந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் பேசியது, அபத்தங்களிலும் அபத்தமாகும். சிவபெருமானின் உடுக்கையில் இருந்து தோன்றிய இரண்டு மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம், மற்றொன்று தமிழ் என்கிறார். மொழி எப்படி உருவாகிறது என்பது குறித்த அறிவியல் சிந்தனை இதில் உள்ளதா? மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் உழைப்பின் தேவை எழுவதைத் தொடர்ந்து மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் பொருட்டு மொழி உரு வானது; மனிதனின் உழைப்பின் பாத்திரத்தால் மொழி வளர்ச்சி பெற்றது. இது தான் மொழியின் விஞ்ஞானப் பூர்வ வரலாற்றின் துவக்கம். இந்தியாவில் 7 ஆயிரம் மொழிகள் உள்ளன. இரண்டு மொழிகளைப் பற்றித் தான் ஆதித்யநாத் பேசியுள்ளார். அப்படியானால், இதர ஆயிரக்கணக்கான மொழிகள் எப்படி உருவாகின? எந்தக் கடவுள்கள் இந்த மொழிகளை உரு வாக்கின? அனைத்து மொழிகளுமே மனித உழைப்பின் விளைச்சல்தான்.

வழிபாட்டுக்கு முன்பே உருவான வாழ்க்கை மொழி

கடவுள் நம்பிக்கை உருவாவதற்கு முன்பே தோன்றிய மொழி அல்லவா தமிழ்? சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதிலுமே இறை வழிபாடு பற்றியோ, தெய்வங்களைப் பற்றியோ இல்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. இயற்கை யோடு இயைந்த வாழ்வுதான் சங்க காலத் தமிழர்களின் வாழ்வு. இயற்கை யோடு மனிதனுக்கு ஏற்பட்ட உறவிலிருந்து உருவான ஒருசில தெய்வங்க ளைப் பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. சங்க இலக்கியங்களில் மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு, வீரம், காதல் – என மக்களின் வாழ்வியல் தான் பேசப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சமூக நிலைமை களில் மாற்றங்கள் ஏற்பட்டு பெருமதங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, பக்தி மார்க்கம் தோன்றிய பின்னணியில்தான் சிவ பெருமான் உள்ளிட்ட இறை வழிபாடுகள் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறுகின்றன.

அதேவேளை, உருவ வழிபாட்டுக்கு எதி ராக, மதச் சடங்குகளுக்கு எதிராக இருக்கக் கூடிய சிந்தனைகளும் தமிழில் உருவாகின. சித்தர்களின் பாடல்கள் உள்ளிட்ட இலக்கி யங்களை நாம் இதற்கு உதாரணமாக குறிப் பிட முடியும். போகிற போக்கில் இவர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் சமப்படுத்துகிறார்கள். தமிழும் சமஸ்கிருதமும் சமமான வையா? உலகத்திலேயே மிக நீண்ட வர லாறும் எண்ணற்ற இலக்கிய வளமும் பெற்ற மொழி அல்லவா தமிழ்? இன்றும் வாழ்கிற மொழி அல்லவா தமிழ்? இளமைத் துடிப்புட ன் கோடானு கோடி மக்களின் இதயங்களில் நிறைந்துள்ள மொழி அல்லவா தமிழ்? இதோடு எப்படி சமஸ்கிருதத்தை ஒப்பிட முடியும்? கீழடி அகழ்வாராய்ச்சியில் 2500 ஆண்டு களுக்கு முன்பே தமிழ் செழித்து, அதன் கலாச்சாரமும் செழித்து ஓங்கி இருந்ததை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடித்து விட்டார் களே! இப்படி வரலாறு ஏதாவது சமஸ்கிரு தத்திற்கு உண்டா? கீழடியைத் தொடர்ந்து கொந்தகை உள்ளிட்ட இடங்களில் நடை பெறும் ஆய்வுகளிலும் பெருமத இறை வழி பாட்டுச் சின்னங்கள் எதுவும் தமிழரின் ஆதி வாழ்வில் இல்லை என்பதை நிரூபித்து விட்டனவே!

அண்ணாமலையின் பேச்சு மோசடியானது

காசி விழாவில் பாஜக தலைவர் அண்ணா மலை பேசியிருப்பது முற்றிலும் மோசடியா னது. தமிழ் ஓர் ஆன்மீக மொழி என்கிறார். ஒரு மொழியின் வளர்ச்சிப் போக்கில் ஆன் மீக இலக்கியங்கள் அதில் தோன்றியிருக்க லாம். ஆனால் ஒரு மொழியே ஆன்மீக வடி வானது என்று அவர் கூறுவது அபத்தமா னது! தேவாரம், திருவாசகம் பற்றி அவர் பேசுகிறார். இவையெல்லாம் பிற்காலத்தில் பக்தி மார்க்கம் உருவான காலக்கட்டத்தில் எழுதப்பட்டவை. சைவ சமயத்தின் காலத் தில் பக்தி இலக்கியங்கள், ஆழ்வார்களின் பன்னிருதிருமுறை, பௌத்த, சமண இலக்கியங்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் பரவிய போது உருவான இலக்கி யங்கள் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தமிழில் பல்வேறு மதம் சார்ந்த படைப்புகள் தோன்றியுள்ளன. அதற்காக தமிழே ஒரு குறிப்பிட்ட மதத்தின் ஆன்மீக மொழி என்று அண்ணாமலை சொல்வது முற்றிலும் அறி வியலுக்கு விரோதமானது. அவர்களது குறு கிய நோக்கத்திற்கு வரலாற்றை வளைப்ப தாகும். இத்தனை பகிரங்கமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரத்தை கொண்டு செல் லும் வகையில் தமிழையும், தமிழ்நாட்டின் மாணவர்களையும் பயன்படுத்துவது முற்றி லும் கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் கூடார மாக மாற்றுவதற்கு, மேற்கொள்ளும் இத்த கைய முயற்சிகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

மடாதிபதிகள் மட்டும்தான் தமிழ் அறிந்தவர்களா?

ஒன்றிய அரசு இந்த நிகழ்ச்சியை நடத்து கிறது என்றால், பாஜக தலைவர் அண்ணா மலைக்கு அங்கு என்ன வேலை? அவர் எந்த அரசின் பிரதிநிதியாக சென்றிருக்கிறார்? பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவருக்கு அங்கே என்ன வேலை? தமிழறிஞர்கள் யாரும் இந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை. மாறாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த சில மடாதிபதிகளை மட்டும் மேடையில் அமர வைத்திருக்கி றார்கள். இவர்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழை ஒரு குறிப்பிட்ட மதத் தோடு மட்டும் இணைத்து பேசுவது எந்த வகையில் நியாயம்? யாதும் ஊரே, யாவ ரும் கேளிர் என்பதுதான் தமிழ் நெறி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது வள்ளுவரின் வாக்கு. யாயும் யாயும் யாரா கியரோ என்பது தமிழர்களின் சாதி-மதத் திற்கு அப்பாற்பட்ட கடந்த கால அக வாழ்க்கை. ஆனால், பிறப்பினால் மனி தர்களைப் பிரிக்கும் சனாதனத்தை தூக்கிச் சுமப்பவர்கள் தங்களது அரசியலுக்கு தமி ழைப் பயன்படுத்த முயல்வது எடுபடாது. இவர்களது விஷ விதைகள் தமிழ்நாட்டில் முளைக்காது. ஒன்றிய அரசு தனது நிதியை எடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அதன் சிந்த னைகளையும் வளர்ப்பதற்கு வரம்பு மீறி நடத்துகிற நிகழ்வுதான் காசி தமிழ்ச் சங்க மம். தமிழக அரசு இதை அனுமதிக்க முடி யாது என்று குரல் கொடுக்க வேண்டும். அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழக அரசின் இந்து சமய அறநிலை யத்துறை சார்பிலும் மாணவர்கள் அனுப் பப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இது ஏற்புடையது அல்ல.

தமிழை ஒன்றிய ஆட்சி மொழி ஆக்குவார்களா?

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழ் மொழிதான் உல கத்திலேயே சிறந்த மொழி, மூத்த மொழி என்று கூறியிருக்கிறார். தமிழ் மொழியைப் பாதுகாப்பது 130 கோடி இந்திய மக்களின் கடமை என்கிறார். அப்படியானால், தமிழ் மொழியை ஒன்றிய ஆட்சிமொழியாக்க வேண்டியதுதானே? சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழி என்று அறிவிக்க வேண்டியதுதானே? இவ்வளவு மூத்த மொழி இங்கே இருக்கிறபோது, தமிழ் நாட்டில் ஏன் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறீர்கள்? ரயில்களுக்குகூட ஏன் இந்தியில் பெயர் வைக்கிறீர்கள்? தமிழை உயர்த்திப் பேசுவது போல பேசிக் கொண்டே தங்களது மதவெறி நிகழ்ச்சி நிரலை சூழ்ச்சிகரமான முறை யில் நிறைவேற்றுவதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜகவினரின் அடிப்படை நோக்கமாகும். இதை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். இதை அனுமதித்தால், நாளை தமிழின் பெயரால் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டம் துணியும். தமிழ்நாட்டையும் மதவெறிக் கூடாரமாக்க இவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழில் காலங்காலமாக எழுதப்பட்டு வந்துள்ள இலக்கியங்களே எதிராக இருக்கின்றன. இந்தக் கூட்டத்தின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். முள் மரம் செடியாக இருக்கும் போதே வெட்டி எறிய வேண்டும் என்பது வள்ளுவரின் வாக்கு.


திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.

Leave a Reply