மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் என்னும் விரைவுப்புகைவண்டியை திருவாரூரில் இருந்து இயக்குவதற்காக ரயில்வேத்துறை பரிசீலனை செய்து வருகிறது.
பொது மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும் “செம்மொழி எக்ஸ்பிரஸ் புகைவண்டியை மன்னார்குடியில் இருந்து தொடர்ந்து இயக்க வேண்டும்” என்றும் “மன்னார்குடியில் இயங்கி வரும் எந்த ஒரு புகைவண்டியையும் மாற்றம் செய்யக்கூடாது”என்றும் வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள்,
பல்வேறு சேவை சங்கங்களோடு தானி ஓட்டுநர்கள், மற்ற வாகன ஓட்டுநர்கள்,லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் இணைந்து மாபெரும் கண்டன பேரணியை 28.11.2022ம் தேதியில் (இன்று)நடத்துகின்றனர்.
பேரணி காலை சரியாக 9.30 மணி அளவில் மன்னார்குடி தேரடியில் இருந்து புறப்பட்டு கடைவீதி வழியாக கோட்டாட்சியாளர்கள் அலுவலகம் அடைந்து கோரிக்கை விளக்க மனு அளிக்கப்பட உள்ளது.
எனவே வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு சேவை சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு செம்மொழி எக்ஸ்பிரஸ் புகைவண்டியை மன்னார்குடியில் இருந்தே புறப்பட வேண்டும் என்ற கோரிக்கை வென்றெடுக்க ஒன்றுபடுவோம் போராடுவோம் என மன்னார்குடி வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.