Home>>உலகம்>>கனடா மொன்றியலில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்
உலகம்கனடாசெய்திகள்தமிழர்கள்

கனடா மொன்றியலில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள்

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் கடந்த நவம்பர் 2022 ,27ம் திகதி வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்

உலகமெங்கும் சிவப்பு – மஞ்சள் கொடிகளுடன் மாவீரர்களை, தாயக சொந்தங்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்நிலையில் கனடா மொன்றியலில் Le Château Royal மையத்தில் தாயக விடுதலைக்காக உயர் தியாகம் செய்த மாவீரர்களுக்கு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர்.

தொடர்ந்து மாவீரர்களின் எழுச்சி பாடல்களுக்கு கலைநிகழ்வுகள் நடந்தேறின. நிகழ்சிகளை கனேடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பொதுமக்கள் பலரும் பங்குயெடுத்தனர்.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
மொன்றியல் கனடா

Leave a Reply