Home>>திரை விமர்சனம்>>“வதந்தி “இணையத்தொடர் விமர்சனம்.
திரை விமர்சனம்

“வதந்தி “இணையத்தொடர் விமர்சனம்.


“வதந்தி ” விமர்சனம்.

உண்மை நடக்கும்.வதந்தி பறக்கும்.
வர வர 2.30 மணி நேரம் படங்கள் கொடுக்க முடியாத ஒரு விறுவிறுப்பை சுவாரசியத்தை 5 மணி நேர இணையத்தொடர்கள் கொடுக்கின்றன.

ஏற்கனவே தமிழில் விலங்கு,சுழல் என தரமான சுவாரசியமான விறுவிறுப்பான இணைய தொடர்கள் வந்து நிலையில், இதோ மீண்டும் ஒரு தொடர்
“வதந்தி (fable of velonie)
ஒரு க்ரைம் திரில்லர் ,கொலை மர்மம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை எப்படி எடுக்கணுமோ அப்படி ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்கள். இப்ப இருக்கிற ரசிகர்கள் எல்லாம் ரொம்பவே ஸ்மார்ட்.அவர்களை out smart செய்வதுதான் ஓர் எழுத்தாளரின் இயக்குனரின் கடமை. குறிப்பாக இதுபோன்ற கிரைம் திரில்லர் படங்களில் படத்தில் சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்க வேண்டும் .ஆரம்பத்திலியோ அல்லது இடையிலயோ ரசிகர்கள் எதையும் கணித்து விடக்கூடாது.
நாம் யார் யாரெல்லாம் சந்தேகிக்கிறோமோ இறுதியில் அவர்கள் குற்றவாளிகளாக நிச்சயம் இருக்கக் கூடாது. குறிப்பாக ஒவ்வொரு பாகம் இறுதியிலும் பார்வையாளர்களை தூக்கி சீட்டின் நுனியில் உட்கார வைக்க வேண்டும் . படத்தின் முடிவு அசர வைக்க வேண்டும். ஆச்சரியப்பட வைக்க வேண்டும். அதுதான் ஒரு நல்ல க்ரைம் திரில்லர் படத்திற்கான அடிப்படை சூட்சமம்..
இதை ரொம்பவே அருமையான செய்து இருக்கிறார்கள் இந்த தொடரில்.
விலங்கு ,சுழல் போன்ற தொடர்களில் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சஸ்பென்ஸ் விடுபட்டு விடும். ஆனால் இந்த வதந்தி தொடரில் இறுதிவரை அதை கொண்டு சென்றிருக்கிறார்கள். கடைசி 15 நிமிடங்கள் தான் படத்தின் மொத்த சஸ்பென்சும் ரசிகர்களுக்கு தெரிய வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் தாண்டி ஓடும் இந்த தொடர் ல, இறுதி கால் மணி நேரத்தில் தான் இந்த கதையின் முடிவும் சஸ்பென்சும் பார்வையாளர்களுக்கு தெரிகிறது என்றால் அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையை பாராட்டியாக வேண்டும்.
எப்பப்பெல்லாம் சஸ்பென்ஸ் வெளிப்பட்டு விடுமோ என்று நாம் நினைக்கும் நேரத்தில் அங்க போய் கதை முட்டிக்கிட்டு நிக்குது. படத்தின் கதாநாயகன் s. j. சூர்யா குழம்பி போய் திக்கு தெரியாமல் நிற்பது போல் தான் பார்வையாளர்களும் இருக்கும் படி கதையை அதிபுத்திசாலித்தனமான நகர்த்தி. இருக்கிறார்கள். கொலையாளி இவர் தான் என்று நினைத்து ஒவ்வொரு இடத்திலும் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்து ஒவ்வொரையும் நெருங்கும் நேரத்தில் அங்கேயே எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு விடுகிறது. ஏறக்குறைய இறுதிவரை அப்படியே தான் படம் செல்கிறது.
Case closed.அவ்ளோதான் என காவல்துறை முடிவு எடுப்பது போலவே நாமும் முடிவு எடுக்கும் சூழலில் தான் கதை நகர்கிறது.
இந்த மர்மம் உண்மையிலேயே வெளிப்பட்டு விடுமா அல்லது பார்ட் 2 மாதிரி வருமா இல்ல கொரியன் படம் memories of murder போல கொலையாளி யார் என்று சொல்லாமல் விட்டு விடுவார்களா என்ற சந்தேகம் நமக்குள் வராமல் இல்ல.
காரணம் 5 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு இனிய தொடரில் குறைந்தபட்சம் நான்காவது மணி நேரத்திலாவது சஸ்பென்ஸ் உடைய வேண்டும்.அதுதான் நியதி. ஆனால் இதில் கடைசி நேரத்தில் கூட உண்மையை கண்டுபிடித்த பிறகும் அங்கேயும் ஒரு தடங்கல் உள்ளது. மீண்டும் கதவு அடைக்கப்படுகிறது.
உண்மைகள் நடந்துபோகும்..
வதந்தி பறந்துபோகும்..
அற்புதமான வசனம்..
பெண்கள் அவர்களின் யதார்த்தப்புற வாழ்க்கை,ஊடகம் அதன் நெறி பிறழ்வு.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஊடகங்கள் எவ்வாறு சுய லாபத்திற்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களின் வக்கிர புத்திகளுக்கு எவ்வாறு தீனி போடுகிறார்கள் என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
பெண்களின் அந்தரங்க உறவு, அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம்..
போலீஸ் வேலையைத் தாண்டிய, தகப்பன் நிலை உணர்வு..
இன்னும் எத்தனையோ..
ஓர் உணவு உண்டாலும், அதன் ருசி அடுத்த உணவு உண்ணுகின்ற வரை மனதில் நெருட வேண்டும்.
ஒரு பயணம் முடிந்தாலும், அது வீட்டுக்கு வந்து. மீண்டும் பயணிக்கும் வரை, மனதில் திரைப்படமாக ஓட வேண்டும்.
திரைப்படம் அது ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொரு விதமாக, அசைபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி ஒரு திரைப்படம்.
ஒரு சிறந்த நடிகன், எதற்காக இயக்குனராக இவ்வளவு காலம் ஒளிந்து கொண்டிருந்தார் என எண்ண வைக்கிறது அவரது நடிப்பு. மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்து இருக்கிறார்.
அதேபோல படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வரும் அந்த பெண் கதாபாத்திரம் வெலோனி , நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார். கதையில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு முகத்தோற்றம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக விறுவிறுப்பாகவே இருக்கிறது. பெரிய அளவில் தொய்வான காட்சிகள் இல்லை. கதையை தீர்மானிக்கும் சில முக்கியமான இடங்களில் சில சொதப்பகள் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து இருந்தால் நிச்சயமாக அடித்து சொல்லலாம். இது போன்ற ஒரு இணையத்தொடர் வந்ததே இல்லை என்று.

இருந்தாலும் மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர், கிரைம் திரில்லர், மர்டர் மிஸ்டரி ரசிகர்களுக்கு தீயாக இருக்கும் இந்த “வதந்’தீ”.

அமேசான் பிரைம்ல உள்ளது.பார்த்து மகிழுங்கள்.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

Leave a Reply