திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர பகுதியில் இருந்தாலும் எங்கள் 33வது வார்டின் ஒரு பகுதி பாமணி ஆற்றங்கரையும் அதை சுற்றியுள்ள சேரன் குளம் வரை உள்ள பகுதி இயற்கை எழிலோடு கிராமம் போல காட்சியளிக்கும். ஏழை அடித்தட்டு மக்கள் அதிகம் வாழும் பகுதி, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு வளர்க்கும் தொழிலில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக ஆடு திருட்டு அதிகரித்து வந்த நிலையில், காவல்துறையின் நடவடிக்கைக்கு பின் சற்று குறைந்திருந்த ஆடு திருட்டு மீண்டும் அதிகரித்துள்ளது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் கடந்த மூனறு தினங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஆடுகளை திருடியவர்கள் இன்று நான்குசக்கர வாகனங்களில் திருடி சென்றுள்ளனர்.
மன்னார்குடி காவல் நிலையத்தில் இரண்டு தினங்களில் நான்கு புகார்கள் எங்கள் பகுதியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆடு திருட்டில் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்கிவருகிறது..சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்தாலொழிய இதற்கு முடிவு ஏற்படாது..ஆடு திருடர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்திற்கு வருபவர்களையும். கருப்பு ஆடுகளையும் களைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
—
செய்தி உதவி:
திரு. அமிர்தராஜா,
மன்னார்குடி.