– ரஞ்சித், மன்னார்குடி
(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
இளைஞர்கள், இளைஞிகள் அரசியலும் அதை சார்ந்த அறிவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் ஏன்….
முன்பெல்லாம் அரசியல் விவாதம் என்பது மேடையிலையோ அல்லது பொது இடத்திலோ பெரும்பாலான தேநீர் கடையிலையோ பேசப்பட்டு வந்தது. அங்கே பேசியவர்கள் எல்லாம் நம் தாத்தாவோ அப்பாவோ போன்றோர்கள் தான் அதுவும் குறைந்த பேர்களே. ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் 90% பேச்சுகள் அரசியல் விவாதமே.
அதாவது சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தும் நாம் நிச்சயம் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் என்பது வாக்கு பிரச்சாரம் மட்டுமே அல்ல நம் அன்றாட சமூகத்தில் நம்மையும் நம் பொருளாதாரத்தையும் சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலும் அரசியல் சார்ந்தே.
உதாரணமாக அணு உலையை எடுத்துக்கொண்டால் ஒரு தரப்பினர் அது ஆபத்து என்று ஆதாரமான தகவல்களை கொடுத்தாலும். மற்றொரு தரப்பு அது நாட்டின் நன்மை, வளர்ச்சி என கண்மூடித்தனமான தகவல்களை முன்வைத்தே தான் சொல்ல வரும் செய்தியை சரி என முன் நிறுத்திகின்றனர்.
இப்போது நடந்த நிகழ்வை எடுத்து கொண்டாலும் பழைய பணம் செல்லாது என அறிவித்ததும் ஒரு தரப்பு இந்தியா வல்லரசு ஆகிவிடும் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்றே சொல்லிக்கொண்டு இருந்தனர். ஆனால் நாம் தெளிவாக சிந்தப்போதுதான் இது பணமதிப்பு இழப்பு, பொருளாதார பின்னடைவு என முடிவுக்கு வந்தோம்.
இதே போலதான் மீத்தேன் என்றால் ஏதோ ஒரு பிரச்சனை திட்டம் என மட்டுமே தெரிந்த நமக்கு அதனால் நம் பொருளாதார, வாழ்வியல் பிரச்சனையை தெரிந்து கொள்ளவில்லை. இந்த பிரச்சனை ஏதோ காவேரி படுகை மாவட்டத்துக்கு மட்டுமான பிரச்சனை என நாம் நினைப்போம்.
ஆனால் இது மொத்த தமிழ்நாட்டுக்கே ஏற்பட்டுள்ள பிரச்சனை அதாவது நாம் தமிழகத்தில் 90% அரிசியை பயன்படுத்திறோம் என்றால் அதில் 60% அரிசி விளைவது இந்த காவேரி படுகையில்தான். மீதம் நாம் கேரளா, கர்நாடக போன்ற பகுதியில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசியே.
இந்த மீத்தேன் திட்டம் செயல்ப்பட்டால் 60% அரிசி பயன்பாட்டை எதைக்கொண்டு நிரப்புவோம் நாம்…..??
அதே போல கீழடி ஆராய்வு ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரிந்துக்கொள்ள முயலவில்லை. நாம் அதாவது இந்தியாவில் நாகரிகம் தோன்றிய இடமாக சிந்து சமவெளி நாகரீகமே என்று நம் சிறுவயது சமூக அறிவியல் பாடத்தில் படித்திருப்போம்.
ஆனால் இந்த கீழடி அகழ் ஆராய்வு சிந்து சமவெளி நாகரீகத்தை விட பல ஆயிரம் ஆண்டு தொய்மை கொண்டதாக ஆதாரத்தோடு விளக்குகிறது. அப்படி பார்க்கப்போனால் தமிழனின் நாகரீகமே தொன்மை என காட்டுகிறது.
அதே போல தான்
ஏன் ஏறுதழுவதல் விளையாட்டுக்கு தடை…
கூடங்குளம் பிரச்சனை…
கர்நாடக தமிழக அணை பிரச்சனை என பல விடயம் உள்ளது… இதை அனைத்தையும் நாம் மேலோட்டமாக பார்த்து சென்றால் சிறிய விடயம் போலே தெரியும்.
ஆனால் ஓவ்வொன்று பின்புலமும் ஓர் மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. அதுவும் நம் வாழ்வாரத்தை சுற்றி நடக்கிறது.
இளைஞர்கள், இளைஞிகள் என அனைவரும் அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது என்றோ நம் சமுதாயத்தில் நம்மை அடையாளம் காட்டும்.
அதற்கு முதலில் நாம் அரசியல் பழக வேண்டும்.