Home>>செய்திகள்>>இராஜராஜ சோழனின் வலங்கைப் படைகள், இடங்கைப் படைகள்
இங்கர்சால் நார்வே
செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இராஜராஜ சோழனின் வலங்கைப் படைகள், இடங்கைப் படைகள்

பகைவரின் அரணை வலதுபுறமாகவும், இடதுபுறமாகவும் வளைத்துச் சென்று போரிடும் வெட்சி வீரர்கள்; Warriors who combat enemies fort surrounding on both right and left directions.

முதலாம் இராசராசன் காலத்தில் இப்படைகள் சிறந்த வளர்ச்சி அடைந்திருந்தன. சோழர் படையில் வளர்ச்சியடைந்திருந்த இப்படைகள், முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில், சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில், கஞ்சனூரில் படைவீடிருந்து, ஆட்சிக்குப் பகையாயிருந்த குறும்பொன்றை அழித்து, ஆநிரைகளைக் கவர்ந்து வந்தமையை, திட்டைக்குடிக் கல்வெட்டு புலப்படுத்துகிறது.

குறும்பெறிந்து ஆநிரை கவர்தலை வெட்சி திணையின் செயலாக “வேந்து வீடு முனைஞர் வேற்றுபுலக்களவின் ஆதந்து ஒம்பல் மேவற் றாகும்.” என்று கூறும் தொல்காப்பிய இலக்கண மரபுடன் வெட்சியாரின் செயல்களாகக் கூறப் பெறும். ‘தந்து நிறை’ பாதீடு ஆகிய துறைகட்கமைந்த நிகழ்ச்சிகள், சோழர் காலத்தில் கி.பி.11-ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருப்பதனை கல்வெட்டொன்று புலப்படுத்துகின்றது.

இத்தேவர்க்கு மூன்றாவது நாளிலே, சோழ மண்டலம் இடங்கை வலங்கையாய் இன்னாயனார்க்குக் குறும்பெரிய காவேரிக்கு வடகரையில் கஞ்சனூரகத்திலே விட்டுக் கொடு இருந்து, குறும்பெறிந்து, நிறைகொண்ட ஆடும், மாடும், கிடாவும், எருமையும் இன்னாயனார் விளக்குக்கு குடுத்த உருக்களில் திருதுன்தா விளக்கு இரண்டுக்கு உடலாக நீக்கின பசு நாற்பதும் நீக்கி, ஆடும், மாடும், எருமையும், முதலான காசு கள அய” (தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை 1903);.

கி.பி. 1070ல் சோழ நாட்டில் அரசுக்கு வாரிசு இல்லாமையால் ஏற்பட்ட குழப்பத்தைக் கீழைச் சாளுக்கிய மரபினனாகிய குலோத்துங்கன் அறிந்து, சோழர் பெண் கொடுத்த தன் தாய் வழி முறையால் விரைந்து வந்து அரசேற்றான். ஆட்சியேற்ற மூன்றாவது நாளிலேயே இந் நிகழ்ச்சி நிகழ்ந்திருப்பது இச் செய்திக்கு உறுதுணையாகும். இச் செயலை விரும்பாத நிலையில், சோழநாட்டில் பகைவர்கள் அமைந்திருந்ததையே, இக்கல்வெட்டு தரும் குறும் பெறிந்த நிகழ்ச்சி புலப்படுத்துகிறது.

“ஶ்ரீ ராஜ ராஜ தேவர் வலங்கைப் பழம்படை” (தெ.கல். தொ. 2: 2 கல். 35);.

வலங்குலம்:

1. வேளாளன்; 2 அகம்படியான்; 3. பட்டணவன்; 4. சாலியன்; 5. வள்ளுவன் ; 6. சான்றான்; 7. இடையன்; 8. குறவன்; 9. குறும்பன்; 10. பறையன்

இடங்குலம்:
1. கம்மாளன், 2. பேரிச்செட்டி, 3. நகரத்து செட்டி , 4. கைக்கோளன், 5. சொக்கன். 6. பள்ளி, 7. வேடன், 8. இருளன், 9. பள்ளன் 10. மேளக்காரன்

தமிழர்களிடையே 13 ஆம் நூற்றாண்டு வரை சாதி இல்லை. குடி என்ற குழு முறை உலகெங்கும் இருந்தது போல தமிழகத்தில் இருந்திருக்கிறது. அதில் ஏற்றத்தாழ்வு இல்லை, வர்ணாசிரம படிநிலை இல்லை, இடது வலது என்ற இரு பிரிவாக மட்டுமே இருந்தது. என்ற கருத்தை அண்ணன் ஏகலைவனின் இராவணன் தொலைகாட்சியில் மன்னர்மன்னன் கூறினார்.

வலங்கை, இடங்கை இடையே கடும் சண்டையும் போட்டியும் இருந்ததாக கேலிச்சித்திர ஓவியர் திரு.பாலாவும் கூறியுள்ளார்.

அது இன்றும் நீடிக்கிறது என்று நினைக்கிறேன் உதாரணமாக வடங்ககையில் பறையர்களும் இடங்கையில் பள்ளர், வன்னியர்களும் (பள்ளி) இருப்பதை காணலாம்.


திரு. இங்கர்சால்,
வள்ளுவர் வள்ளலார் வட்டம்,
நார்வே

Leave a Reply