Home>>கவிதை>>மாமன் மகள்
கவிதை

மாமன் மகள்

அன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள், 

பாசத்தை காட்டி பயணிப்பவள்! 

 

எனக்கு ஒரு துன்பம் என்றால்

தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்! 

 

அடுத்தவீட்டிற்கு சென்றாலும்

அன்பு குறையாதவள்

அவள்! 

 

வீட்டிற்கு 

செல்லும்பொழுதெல்லாம்

பொன்சிரிப்போடு என்னை வரவேற்பவள் அவள்! 

 

அன்னையின் மறு உருவம் அவள், 

தந்தைக்கு நிகரானவள் அவள்! 

 

பசியோடு சென்றால் 

பறந்து பறந்து பரிமாறும் 

குணம் கொண்டவள் அவள்! 

 

ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்தாலும் அன்போடு என்னை

அரவணைப்பவள் அவள்! 

 

யாரிடமும் கை நீட்ட கூடாது

என்று கட்டளை இட்டவள் அவள்! 

 

ஆயிரம் கவலையோடு சென்றாலும்

கவலையை மறக்கடிக்கும்

கண்கள் உடையவள் அவள்! 

 

நான் தடுமாறும் போது தாங்கி பிடிக்கும் சக்தி கொண்டவள் அவள்! 

 

வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் திகழ்பவள் அவள்! 

என் வாழ்க்கையை வசந்தமாக்கியவள் அவள்! 

என் உயிருக்கு உருவம் அவள்! 

 

— கார்த்திக், உள்ளிக்கோட்டை

(2050 மாசி மாத மின்னிதழிலிருந்து)

Leave a Reply