— ஜெ. பாரதிராஜா,
பைங்காநாடு, மன்னார்குடி
(2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


மரபு
மொழி
கலாச்சாரம்
கலை
இலக்கியம்
அடையாளம் அனைத்தையும் தொலைத்துவிட்டோம்

ஆனால்
நாம் பேசுவதோ வீரவசனம்
நான் தமிழன் என்றும்
நாம் தமிழர் என்றும்
வெட்கக்கேடு…

கொள்ளையனுக்கு கொடி பிடித்தோம்
அயோக்கியனிடம் – ஆட்சி
அதிகாரத்தை கொடுத்தோம்
கூத்தாடிக்கு காத்தாடியானோம்

ஆயிரத்துக்கும்
இரண்டாயிரத்துக்கும்
உரிமையை விற்றுவிட்டு – இன்று
உரிமைக்காக போராடுகிறோம்

இதுதானே நாம் செய்த சாதனை
நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை (தமிழரை) நினைத்துவிட்டால்
என்று அழகாக பாரதி
அன்றே சொல்லிவிட்டார்

இனியேனும் மாற்றத்தை
நோக்கி பயணிப்போம்..

போராட்டகளம் தமிழரின் விளையாட்டு மைதானம்
போராட்டம் தான் தமிழரின்
வீர விளையாட்டு

புறப்படுங்கள் தோழர்களே..
இழந்ததை மீட்போம்
மீட்பதை காப்போம்..

வெற்றி வெகுதூரம் இல்லை
வெற்றி நமதே ….


படஉதவி: @madhavanr

Leave a Reply