‘ ஆக மொத்தத்துல சாதிதான் முக்கியம்.?’
‘ கண்டிப்பா.!’
‘ பெத்தப் பொண்ணவிட சாதிதான் வேணும்.?’
‘ ஆமா.’
‘ வேற எதுவும் முக்கியமில்ல.?’
‘ இல்ல.’
‘ பொண்ணு வேற சாதி பையனக் கட்டக்கூடாது.?’
‘ ஆமா. அப்படி மட்டும் கூடவே கூடாது.’
‘ அதத் தடுக்க என்ன வேணாலும் பண்ணுவிங்க.?’
‘ பெத்தப் பொண்ணுன்னாலும் கொன்னு போடுவிங்க.?’
‘ பெத்தப் பொண்ணென்ன பெத்தப்பொண்ணு.? எங்க சாதில எந்தப் பொண்ணையும் சரி, வேற சாதிக்காரனோட சேரவே விடமாட்டோம்.’
‘ நிஜமாவா.? எந்தப் பொண்ணையுமா.?’
‘ எந்த பையனையும்கூட விடமாட்டோம்.
—டாவின்சி கார்த்திக், சேலம்.
(2050 சித்திரை மாத மின்னிதழிலிருந்து)