Home>>சுற்றுசூழல்>>அணு உலை ஏன் ஆபத்து?
சுற்றுசூழல்தமிழ்நாடு

அணு உலை ஏன் ஆபத்து?

– மன்னை செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி
(2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


கதிரியக்கம் என்பது இயற்கையிலே சில தனிமங்களுக்கு உண்டு. போலோனியம், யுரேனியம், ரேடியம் போன்றவை. இந்த தனிமங்கள் இயற்கையிலே கதிர் வீச்சு தன்மை உடையது. அதனுடைய கதிர் வீச்சு அளவு கியூரி என்று அழைக்கப்படுகிறது.

கியூரி அளவு அதிகமாகும் போது அதன் கதிர் வீச்சு திறன் அதிகமாகும். கதிர் வீச்சு வெளிப்படும் தன்மையின் அளவு ரான்ஜன் per மணி (Roentgen/hour). சராசரியாக நம் உடல் .25 மில்லி ராஞ்சன் / மணியை தான் தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் நம் உடல் பெரும் போது விளைவுகள் பாதிக்கும். அந்த அளவு அதாவது நம் உடலில் சேரும் கதிரியக்க அளவு (dosage) rem என்று சொல்லப்படுகிறது.

இது 300 முதல் 400 rem வரை உடலில் சேர்ந்தால் 60 ல் 50 பேர் மரணம் நிச்சயம். Lead, ஸ்டீல் போன்ற உலோகங்களை கொண்டு shielding அமைத்து நாம் கதிர் இயக்க பரவலை பெரும் அளவு தடுக்க முடியும். ஆனால் ஒரு விபத்தில் போது அந்த shielding பாதிக்கபடும் போது விளைவுகள் கடுமையாக இருக்கும். ஏன் கடுமையாக கூட இருக்கும் குறிப்பாக கூடங்குளத்தில்.

மேற்கூறியது இயற்கை கதிரியக்க தனிமங்கள் பற்றி. அடுத்து செயற்கை முறையில் எப்படி கதிரியக்கம் ஏற்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம். அணுக்கரு பிளவு மூலம் உருவாக்கலாம்.

இரண்டு கதிரியக்க தனிமங்களை ஒன்றோடு ஒன்று மொத செய்வதன் மூலம் (bombarding), அணுவில் உள்ள நியூட்ரான் மதிப்பை மாற்றி அணு நிறை எண் மாற்றப்படும் போதும் உருவாக்கலாம். ஆனால் ஒரு முறை கதிரியக்கம் தூண்டப்பட்டால் அது அவ்ளோ சீக்கிரம் பழைய நிலைக்கு வராது x ray போல.இது காமா ரே எனவே அது தொடர்ந்து செயல் பட்டு கொண்டே இருக்கும் .ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதன் வீரியம் குறையும்.

இங்கே நான் சொல்ல வருவது இயற்கையிலே கதிரியக்க தன்மை உள்ள uranium 238 தனிமத்தை மேலும் அணுக்கரு பிளவு என்ற செயற்கை முறையில் அதன் கதிர் இயக்க தன்மை மேலும் செறிவூட்டப்படுகிறது அது தான் uranium 235.

எனவே அதன் வீரியம் எவ்வளவு என்று எண்ணி பாருங்கள்..அதற்கு தான் அனைவரும் குமுறுகிறார்கள். மேலும் நம் மண்ணில் குறிப்பாக கேரள கடற்கரையில் எண்ணற்ற முறையில் கிடைக்கும் தோரியத்தை செயர்கை முறையில் அணுக்கரு பிளவு முறையில் கதிர் இயக்கத்தை தூண்ட முடியும். ஆனால் மிக அதிக விலையில் ரசியாவில் இருந்து யுரேனியம் ஏன் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதற்கு ஒரே காரணம் தான். அப்பறம் அவர்கள் யாரிடம் தான் விற்க முடியும் மித மிஞ்சிய யுரேனியத்தை. எனவே மிக மிக ஆபத்தான ஒரு விடயம் இங்கே நடைபெறுகிறது.

அவர்கள் சொல்லும் ஒரு காரணம் நம் தமிழக மின் பற்றாக்குறை சரி செய்யவே இது என்று. 5 வருடங்களுக்கு முன் நம் மின் பற்றாக்குறை அளவு 5000 மெகா வாட்ஸ் க்கு மேல். ஆனால் கூடங்குளம் உற்பத்தி எவ்வளவு? அதில் தமிழ் நாட்டின் பங்கு எவ்வளவு?

1000 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யப்படும் போதே நம் பற்றாக்குறை எப்படி சரி ஆனது???

நாம் சிந்திக்க மட்டும் அல்ல இது போன்ற ஆபத்தான விடயங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் அதிக விழிப்புணர்வு பெற வேண்டும்.

Leave a Reply