அழகான ஊர் வடுவூர்,
அது எங்கள் ஊர்,
பசுமையான ஊர்!
பாசம் கொட்டும் தாயாகவும்
பண்பு சொல்லும் தந்தையாகவும்
அன்பு காட்டும் அக்காவாகவும்
நேசம் வளர்த்த நண்பர்களாகவும்
கதை சொல்லும் பாட்டியாகவும்
என அனைத்து உறவுகளையும் ஒரே இடத்தில் கொண்டுள்ள ஊர் எங்கள் ஊர்!
பச்சைபசும் வயல்வெளியில்
பயிர்கள் ஆட,
பயிர்களுக்குள் நெல்மணிகள் மறைந்து சிரிக்க,
ஏரி, குளம், குட்டை, ஆறு அனைத்திலும் நீர் பொழிய,
இயற்கை நிழலாடும் எங்கள் ஊர்!
வடுவூர் என்றாலே நினைவிற்கு வரும் பலவற்றுள் முதலில் ஒன்று கபாடி!
எங்கள் ஊரில் உள்ள ஆடவர், பெண்கள் கபாடி ஆடி தோற்றதாக இச்சரித்திரத்தில் இடமில்லை!
புழுதி பறக்கும் களத்தில் குருதிச்சொட்ட விளையாடும் கபடி!
நாலு பேரு ஒன்னா சேந்தா நடுவுல ஒரு கோடு போட்டு, அணிக்கு ரெண்டா பிரிச்சி ஆசையோடு விளையாடும் கபடி!
இதயத்துடிப்பு
முற்றமடையும்போது
நாடித்துடிப்பாய்த்
துடித்துத் துடித்து
நிற்பதே
எங்கள் ஊர் கபடி!
எம் ஊரின் மற்றொரு பெருமையோ வடுவூர் கோதண்டராமர் கோயில்!
பக்தர்களின் மனங்களுக்கு பரவசமளிக்கும்.
பாவமழித்து மோட்சமடைய வழிவகையமைக்கும்!
சித்தர்களும் முனிவர்களும் வணங்கி வரும் பெருமைகளை கொண்ட கோயில் இக்கோயில்!
வடுவூரின் இயற்கை அழகை கண்டு அந்நிய பறவைகள் கூட புத்தக அளவில் இடம் பெற்றுள்ள எம் ஊர் ஏரியில் தஞ்சம் புகுந்துள்ளன!
இத்தகைய பெருமைகளை கொண்ட வடுவூரில் பிறந்தமைக்கு என்ன தவம் செய்தேனோ!!
– கார்த்திகா இராமதாஸ்,
பொறியாளர்,
வடுவூர் புதுக்கோட்டை
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)