என் சாமி? என் சாமி?
என்ற வார்த்தை!!
என் செவிகளின் வழி ஊடுருவி என் நெஞ்சை கூறுகூறாக உடைக்கிறது!
போர் களம் சென்று ஒரு நாட்டையே எதிர்த்து போராடி வென்ற மாவீரன் வாழ்ந்த மண் இது!
அன்று பெண், தெய்வமாக மதிக்கப்பட்டாள்.
இன்று?
முன்விரோதம் என்ற ஓர் எச்சை காரணத்தை மனதில் புதைத்துக் கொண்டு,
நீ மனித குலத்தில் பிறந்த ஆறு அறிவு கொண்ட உயிர் என்பதை மறந்து,
சிறிது நேரம் மயக்கம் தரும் மதுவை அருந்தி விட்டு,
அந்த குழந்தையின் கை கால்களை கட்டி எரித்தியே!!
ஏய் மிருகமே!!
உனக்கு எதற்குடா மரியாதை!
உன்னையெல்லாம் கைது செய்கிறதடா என் அரசாங்கம்!!
அசிங்கமாக உள்ளது.
பணம் இருந்தால்,
இன்று அவளுக்கு நீதி கிடைத்திருக்கும்!
புகழ் இருந்தால்,
இன்று அவளுக்கு நீதி கிடைத்திருக்கும்!
அரசியல் பலம் இருந்தால்,
இன்று அவளுக்கு நீதி கிடைத்திருக்கும்!
விவசாயின் மகளாய் பிறந்துவிட்ட பாவத்தால் என்னவோ!!
தன் மண்ணிற்கே உரமாகிவிட்டாள்!!
இதைவிட்டுவிட இதற்கு நியாயம் கிடைக்கவில்லை!
பெண் இனமே, உன்னிடம் ஒன்று சொல்கிறேன்!
நீ ஒழுக்கத்தில் மட்டும் பெண்ணாக வாழு!
உன் பெண் இனத்திற்கு ஒரு இழிவு என்றால்
இறங்கி அடி!!
எதிர்த்து நில்!!
அரசியல் பலமாவது,
பண பலமாவது…
உன் நீதி கோபத்தின் நியாய பார்வையில்!
அதெல்லாம் சுட்டெரிக்கப்பட வேண்டும்!
சட்டம் மாற வேண்டும்!
அதற்கு நாம் (பெண் இனம்) மாற வேண்டும்!
இதுபோல் கொடுமை நடந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்!
தண்டிக்கப்படும் அந்த மனித மிருகம்!
கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஒவ்வொரு பெண்ணின் தாய் தந்தையின் முன்னிலையில் தண்டிக்கப்பட வேண்டும்!
அநியாயம் செய்தவர்கள் அழிய வேண்டும்!
தரப்படும் பணத்தால் அவள் வர போவதில்லை!!
தர மறுக்கும் நீதியை தந்தால் இனி வாழும் பெண்ணினமாவது பிழைக்கும்!!!
பா.எழிலரசி பாலசுப்பிரமணியம் சாந்தி,
புவியியல் துறை,
மூன்றாம் ஆண்டு,
அ.வீரைய வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி பூண்டி,
என் ஊர் மன்னார்குடி.
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)