மழையினூடே மின்னல் என
பிறந்த தேவதை அவள்!

ரோஜா இதழின்
பனித்துளி அவள்!

ஆயிரம் வண்ணத்து
பூச்சிகளின் வண்ணம் அவள்!

துள்ளி குதித்து சிரிக்கும்
மான் குட்டி அவள்!

கொஞ்சி கொஞ்சி நடக்கும்
அன்னமயில் அவள்!

வாசனையில்
மல்லிகையின் நறுமனம் அவள்!

வண்டுகளின் ரீங்காரம் அவள்!
குயிலின் ஓசை அவள்!
குற்றால அருவி அவள்!

தித்திக்கும் சிறுவானி
தண்ணி அவள்!

வைகறையின்
சூரியன் அவள்!

அந்திபொழுதின்
பொற்சூடர் அவள்!

தேன்நிலவின்
அம்சம் அவள்!

நட்சத்திர கூட்டத்தின்
மையப்புள்ளி அவள்!

எங்கள் வாழ்வின்
அடையாளம் அவள்!

உலகின்
மகாராணி அவள்!

இயற்கையின் பேர்
அதிசயம் அவள்!

எனை வியாபித்து நிற்கும் தங்க மகள் தமிழ் போல் வாழ்வாங்க வாழ வாழ்த்துகிறேன்.


இப்படிக்கு,
யாத்வி மீராக்காக,

(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)

படஉதவி: https://unsplash.com/@maxwbender

Leave a Reply