எல்லையில் நின்று எல்லையில்லா இன்னல்களை அனுபவித்தாய்….!
இதயத்தை இரும்பாக்கி
கொண்டாய்….!
தேசப்பற்றை
உயிராக்கிக் கொண்டாய்….!?
தாயைப் பிரிந்தாய்..,!
தாய் நாட்டைக் காத்தாய்…!
தாலி கட்டியவளை பிரிந்தாய்….!
எல்லையில் வேலியை..
தொட்டவனை வென்றாய்….!?
பெற்ற மகனைப்
பிரிந்தாய் …?
தேசத்தின் மகன்களை
காத்தாய்….!
எல்லையில் நீ
விழித்திருக்க…!
பதட்டத்தில்
உன் குடும்பம்
தூங்காமல் இருக்க…!
நாங்கள் மட்டும்
தூங்குகிறோம்..
நிம்மதியாக….?!
எதிரிகளிடமிருந்து
எல்லயைப்
பாதுகாக்க…
எதிர்த்துப் போரிட்டு வீரமாய் வீழ்ந்தாய்..!?
மண்ணில் நீ விழுந்தாலும்…!
விதையாய் விருட்சமாய்
வளர்கிறாய்..!
ஒவ்வொரு இந்தியன்
இதயத்திலும்…!?
– முனைவர்.சா.சம்பத்
தேசிய பயிற்சியாளர்
மன்னார்குடி.
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
படஉதவி: https://unsplash.com/@edelputte