தெருவோர நாயிடம்
பயம் கொள்கிறது
பணக்காரன் வீட்டிற்குள்
வளர்த்த சிங்கம்.
—-
மலையொத்த மதில்மோதி
வீசும் காற்று உங்கள்
மனம் குளிர செய்கிறது
என்றால் அது
எங்கள் மன்னையாக இருக்கும்…
—-
அமீரகத்தின் அந்தி வான
சூரியன்
அவள் நெற்றி பொட்டை
நினைவூட்ட மறப்பதில்லை…
—-
கூண்டு கிளிகளின்
குஞ்சிகளுக்கும்
சிறகுகள் இருக்கின்றன..!!
—-
கொஞ்சல் மொழிபேசும்
தங்கமகளின்
பிஞ்சிகைகள்
அள்ளிதருவது
அன்னமா..???
அமுதமா ..??
—-
இறகு முளைத்த ஈசல்கள்
போலதான்
ஏழைகளின் ஆசையும்…
ஓலை குடிசைக்குள்
உண்டான ஓடையில்
கப்பல் விட்டு களித்த சிறுபிள்ளைக்கு கார்முகில்
வரமா…?
சாபமா….?
—-
விருட்சமாகும் விதைகள்
சைவமெனில்
முட்டையும் சைவமே…
—
மன்னை ராஜேஷ்
(அமீரகத்தில் இருந்து)
படஉதவி: @sarandywestfall_photo