ஐயா தமிழ்திரு. கிரா எனும் கி. ராசநாராயணன் அவர்களின் “கோபல்லபுரத்து மக்கள்” புதினம் வாசிப்பு அனுபவம்.
கதைக்களம் ஆந்திராவில் இருந்து தெலுகு பேசும் கம்மாவார்கள் அதாவது இப்ப உள்ள கம்மநாயிடு மக்கள் ஏன் அங்கிருந்து அரவதேசம் என அவர்கள் கூறும் தமிழகத்திற்க்கு வருகிறார்கள் என்பதை கதைக்களமாக கொண்டு, விசயநகர பேரரசு இறுதி காலத்திற்க்கும் ஆங்கிலேயர் வருகைக்கும் இடைபட்ட காலத்தையும் 1858ல் இங்கிலாந்து விக்டோரியா மகாராணி கும்பினி ஆட்சியை தான் ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்கும் காலம் வரை பேசியது கோபல்ல கிரமாம் புதினம் அதன் தொடர்ச்சியாக கொண்டு நகர்ந்து இந்திய ஒன்றியம் 1947ம் ஆண்டு சுதந்திரம் பெரும் வரை நகர்கிறது இந்த நூல்.
வெறும் தெழுங்கு பேசும் மக்கள் மட்டுமே வாழ்ந்த கிரமத்தில் எப்படி தமிழ்பேசும் தமிழர்குடிகள் கோனார்கள் வெள்ளாளர்கள் பெண் வேலை செய்வோர் மர தச்சு இரும்பு வேலை செய்வோர் என இணைந்து பல்கி பெருகியது அக்கிராமம். அவர்களின் வாழ்வியல் கல்வி, சுதந்திர தாகம் எப்படி அவர்களுக்குள் வருகிறது. என்பதை எல்லாம் அந்த கிராமத்துக்கே அழைத்துச்சென்று லாயிக்க வைக்கிறார் நூல் ஆசிரியர் ஐயா கீரா அவர்கள்.
சாமிக்கண்ணாசாரி என்ற தமிழ் வாத்தியாரை அழைத்து வருகிறார்கள் அவர்தான் அந்த ஊர் பிள்ளைகளுக்கு முதல் ஏட்டுக்கல்வி வாத்தியார் அவர் வந்த பிறகுதான் அந்த கிராம பிள்ளைகளுக்கு தமிழ் எழுத கற்றுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல சிலம்பம் வீரருமாவர் அவர் மாலையில் அந்த ஊர் இளவட்டங்களுக்கு சிலம்பம் கத்துக்கொடுக்கிறார் மிக கண்டிப்பானவர் அவரை கண்டு அனைவரும் பயப்படவும் செய்தனர் அந்த கிரம மக்களுக்கு அவர் சற்று வித்தியாசமாக காணப்பட்டார் வந்த போது. அவர் கடைசிக்காலம் மிக சோகமாக முடியும்.
இன்றைய அரசு பள்ளிகள், தனியார் பள்ளி வந்த பிறகு என்ன நிலையானதோ அதே நிலைதான் அவருக்கும் ஏற்படும் ஆங்கிலேயர் பள்ளிகள் வந்த பிறகு. இன்றைய மக்கள் மனநிலையில் தான் அன்றைய மக்களும் இருந்துள்ளனர்.
முன்பு கிராமமங்கிலில் ஊர் பொதுக்காளைகள் என இருக்கும் அதாவது கோவில் காளை என நேந்து விடுவார்கள் அது இசுட்டத்துக்கு சுற்றும் யார்வீட்டு கொட்டகைக்குள்ளும் நுழையும் கம்மபுல்லை உண்னும், பசுவை வம்பு செய்யும் அதையாரும் விரட்டவோ அடிக்கவோ மாட்டார்கள். அப்படி இந்த புதினத்தில் ஒரு காளை வரும் காரி என்று! இந்த புதினத்தில் ஒரு பகுதியில் அது தான் கதாநாயகன் அந்த அளவு அதை சிறப்பாக பதிவு செய்திருப்பார்.
கிட்டப்பா கதையின் கதாநாயகன் அக்கிரமத்தின் சிறந்த வீரன். அவன் மாமன் மகள் அச்சிந்தலு கதையின் கதாநாயகி. இவர்களது காதலும் ஊடலம் அழகு. விதிவசத்தால் பிரிந்து இறுதிக் காலத்தில் இணைவது மகிழ்வு.
ஏட்டுக்கல்வி முடிந்த பிறகு மேல் படிப்புக்கு கிரமாத்தின் பெரியவீட்டு பிள்ளைகள் அன்னமய்யா, சுப்பையா செல்வார்கள் அங்கு சென்ற பிறகுதான் சுதந்திர தாகம் புரட்சி என்பதெல்லாம் அவர்களுக்குள் முளைக்கத் தொடங்குகிறது. அதை எப்படி கிரமத்திற்க்குள் கொண்டுவருகிறார்கள் கல்லுக்கடைக்கு எதிரான போராட்டம், அரசியல் பொதுக்கூட்டம், டார்ச்லைட் போன்ற அயல்நாட்டு பொருட்கள் ஊருக்குள் வருவதும் அதன் மூலம் நடக்கும் சில சுவாரசிய நிகழ்வுகள்.
இரண்டாம் உலகப்போர் வர உலக நாடுகளின் நிலை அதை பற்றிய அரசியல் பேச்சுகளும், அப்போது ஆங்கிலேய இராணுவத்துக்கு ஆள் எடுக்க அதிகாரிகள் வர உயரமானவர்களை தேடுவதும் அவர்கள் ஒழிந்துக்கொள்வதும்.
பகத்சிங் மற்றும் அவர் தோழர்கள் கைது. அதற்கு காந்தியின் நிலைபாடு அதானல் காந்திமேல் ஏற்படும் அதிர்ப்தி, சுபாசந்திரபோசு எப்படி இந்தியா இரணுவம் கட்டமைக்கிறார், எங்கெல்லாம் செல்கிறார், யாரை எல்லாம் சந்திக்கிரார் என்பன அவர் மீது மக்கள் கொண்டுள்ள பற்று.
இறுதியாக கிந்துசுத்தான் ஆங்கிலேய கப்பலில் வேலை செய்யும் இந்திய மாலுமிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக திரும்புவதும், அவருக்கு ஆதரவாக கத்தியவார் கப்பல் மாலுமிகளும் துணை வர பின் மற்ற கப்பல் மாலுமிகள், காவல் துரையில் உள்ள இந்திய அதிகாரிகள், விமானப்பயில் உள்ள அதிகாரிகள் பொதுமக்கள் ஆதராவாக நிற்க! சமாலிக்க முடியாத வெள்ளை அரசு எப்படியான நிலைக்கு தள்ளப்படுகிறது.
காங்கிரசின் நிலை என்ன? முசுலிம் லீக் நிலை, கமியுனிசுட்டுகள் நிலை என்ன?? சுதந்திரம் பெற்றோமா இல்லை ஆங்கிலேயன் இனி இந்தியாவை நம்மால் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலையில் கொடுத்துவிட்டு போனானா?? எதன் அடிப்படையில் கொடுத்தான் என்ன நிபந்தனையில் கொடுத்தான். காந்தியின் நிலைபாடு என்ன? நேரு கையாண்ட நிலை என்ன? அன்றைய நிலையை நடுநிலையோடு விளக்கியுள்ளார்.
கதைமாந்தகளாக வரும் மன்னார் நாயக்கர், மைனர் நாயக்கர், ஐயர் சாமி, அபி நாயுண்டு, வேலுக் கோனார், சப்பாணி, சாமி நாயக்கர், கொத்தாளி கவுண்டர், இளவட்டங்கள், இறுதியாக மாலுமிகள் போரட்டத்தையும் அரசியல் நிலவரங்களையும் கூறும் மணி. கதையின் பலம்.
கோப்பல்ல நூல்கள் இரண்டுமே ஆக சிறந்த படைப்புகள் வாய்பு கிடைப்பின் வாசித்துப்பாருங்கள்.
நன்றி.
பேரன்புடன்,
மனோ குணசேகன்,
புள்ளவராயன்குடிக்காடு, மன்னார்குடி.
06/12/2020.