மனித நெஞ்சம் அழுகிறது
பழி தீர்த்த இயற்கையால்!
அன்பு மழலை அழுகிறது
அதி தீவிர கஜா புயலால்!
தேடுகிறது ஆட்சியாளர்களை
மூடுகிறது பயத்தில் விழிகளை!
நாடுகிறது உதவிடும் நண்பர்களை
ஏங்குகிறது உறைவிடம் தெரியாமல்!
மலைபோல் குவித்தது.. குப்பைகளால்
பாலைவனம் ஆனது அழிந்த குடிசையால்!
வீடாகிறது வீதிகளும் பள்ளிகளும்!
கண்ணீர் வழிகிறது
ஏழையின் விழிகளில்!
வேற்றுடை இல்லை அணிந்திட
மாற்றிடம் இல்லை வாழ்ந்திட !
தோற்றது சாதிமத பேதமிங்கு
வென்றது மனிதநேயம் எங்கெங்கும்!
நல் இதயங்கள்ஆற்றின மானுட காயங்கள்!
செழுதிட்ட சமத்துவம்
தழைத்திட்ட ஒற்றுமை
நிலைக்க ..,,!
சமதர்ம சமுதாயம் வாழ்ந்திட
இணைந்தே இருப்போம் – இவ்வுலகில் ..
என்றென்றும்…
— முனைவர். சா.சம்பத், மன்னார்குடி
(2050 தை மாத மின்னிதழிலிருந்து)