Home>>உலகம்>>கத்தாரில் விபத்தில் மரணமடைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
உலகம்செய்திகள்தமிழ்நாடு

கத்தாரில் விபத்தில் மரணமடைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது

– நூ.முகமது ரியாஜ்,
கத்தார்


கத்தாரில் உள்ள ஒருங்கிணைந்த தமிழர் பேரவையிடம் இருந்து “திறவுகோல்” ஊடகத்திற்கு வந்த தகவலை இங்கு பகிர்கிறோம்.

தோஹா – 06/08/2020

கத்தாரில் ஒன்றரை வருடமாக இருந்து வந்த தமிழக இளைஞர் சமையல் செய்த போது தீப்பற்றி விபத்து ஏற்பட்டு வக்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பலன் இன்றி 21/07/2020 இறந்து விட்டார் என இறந்தவரின் தந்தை (சிவா) ஒருங்கிணைந்த தமிழர் பேரவைக்கு 22/07/2020 அன்று கடிதம் மூலம் தெரிவித்து, இறந்த திலிப் அவர்களின் உடலை தாயகம் அனுப்ப வேண்டி கேட்டுக் கொண்டிருந்தனர்.

இதனை மேற்கொண்டு விசாரித்ததில் கத்தார் வக்ரா அரசு மருத்துவமனையில் இறந்த திலிப் அவர்களின் உடல் இருப்பதை அறிந்தோம்.

இறந்தவர் (திலிப்) கடந்த ஒன்றரை வருடமாக கத்தாரில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கத்தாரில் இருப்பதற்கு இருப்பிட உரிமம் இல்லை, இந்திய கடவுசீட்டு இல்லை. இவ்வாறே சில மாதமாக வசித்து வந்துள்ளார்.

இதனை ICBFல் கொண்டு சென்றோம், ICBF இணை செயலாளர் மூலம் இந்திய தூதரகத்திற்க்கு கொண்டு சென்றோம். இந்திய தூதரக உதவியுடனும் கத்தார் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதி செலவுகளை இந்திய தூதரகமும், ICBFன் சார்பில் உடல் கொண்டு செல்ல பெட்டியும், மற்ற செலவுகளை ஒருங்கிணைந்த தமிழர் பேரவையும் செய்துகொண்டோம்.

மற்றும் இறந்தவரின் உடல் இந்திய ஒன்றியத்தின் தமிழகத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டது. அதன் ஒளிப்படங்களை இங்கு பகிர்கிறோம்.

இதன் முயற்சியில் உதவி செய்த இந்திய தூதரக அலுவலர் திரு. தீராஜ் குமார் அவர்களுக்கும், ICBF தலைவர் திரு.பாபுராஜன் அவர்களுக்கும், திரு.ஸலாம் அவர்களுக்கும், திரு.சந்தோஷ் பிள்ளை அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த மனிதநேய பணிகளுக்குகாக பல்வேறு வகையில் பலர் உதவி செய்த செய்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை,
கத்தார்
07/08/2020

Leave a Reply