திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் சமீபகாலமாக நீர்நிலைகளை மீட்பதில் பெரும் பங்கு வகிக்கும் நேசக்கரம் அமைப்பினர் பல சவால்களையும் எதிர்கொண்டு ஒவ்வொரு பணியையும் திறம்பட கையாண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகில் (சந்தைப்பேட்டை) உள்ள பராங்குச தேசிகர் குளம் முற்றிலும் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த நிலையில், அதை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
அதே நேரம் இந்த குளத்தை மீட்டப்பின்னர் நீரைக்கொண்டு நிரப்பி அதை மக்களின் பயன்பாட்டிற்கு எப்படி கொண்டு வர போகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் முப்பரிமாண காணொலியை இன்றைய (07.08.20) கலந்தாய்விற்கு பின்னர் வெளியிட்டுள்ளார்கள்.
நேசக்கரம் அமைப்பின் கௌரவத் தலைவர் காவிரி திரு.எஸ்.ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவர் திரு சி.அசோக்குமார் முப்பரிமாண காணொலியை நேசக்கரம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நேசக்கரம் அமைப்பினருடன் உள்ளூரில் உள்ள பிற சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.