Home>>செய்திகள்>>மன்னார்குடியில் கொரனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு
செய்திகள்தமிழ்நாடு

மன்னார்குடியில் கொரனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு

திருவாருர் மாவட்டம் மன்னார்குடியின் காந்தி சாலையில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் இன்று (10/08/2020) காலை முதல் மக்கள் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.

வங்கிக்கு வந்த மக்கள் விழிப்புணர்வு இன்றி மிக நெருக்கமாக நின்றாலும், மறுபுறம் அந்த வங்கி அலுவலர்களும் போதிய இடைவெளி விட்டு நிற்க சொல்லி அவர்களை அறிவுறுத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

கடந்த இரு நாட்கள் விடுமுறை என்பதாலும் ஓய்வூதியம் மற்றும் இதர பணிகளுக்காக வங்கியின் வாசலில் காலை முதல் மக்கள் கூட்டமாக நின்றனர். இது போன்ற நேரங்களில் மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு எளிய வழிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் கொரோனா கிருமி தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது.

Leave a Reply