Home>>அரசியல்>>பெய்ரூட் வெடி விபத்து – லெபனான் அரசாங்கம் பதவி விலகியது
அரசியல்உலகம்செய்திகள்

பெய்ரூட் வெடி விபத்து – லெபனான் அரசாங்கம் பதவி விலகியது

உலக வரலாற்றில் நடைபெற்ற வெடி விபத்தில் மிகப் பெரும் வெடி விபத்தாக பார்க்கப்படும் துயரச் சம்பவம் கடந்த 4ம் தேதி நடந்த லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தின் பெரும் வெடிவிபத்து. லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 4ம் தேதி வெடித்துச் சிதறியது.

இதில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இந்த பெரும் வெடிவிபத்தில் ஏறக்குறைய 3,00,000 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

அரசுக்கு எதிராக மக்களின் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஒருவாரமாக தொடர்ந்த நிலையில் கொந்தளிப்புக்கு மத்தியில் லெபனான் பிரதமர் நேற்று திங்கள்கிழமை இரவு ராஜினாமாவை அறிவித்தார்.

பிரதம மந்திரி ஹசன் டயப் தேசத்திற்கு இறுதியாக ஆற்றிய உரையில் “அளவிட முடியாத பேரழிவு” என்று கூறினார்.

உணர்ச்சியற்ற உரையில், டயப் “நாங்கள் வீரம் மற்றும் கண்ணியத்துடன் போராடினோம்.”

செவ்வாயன்று ஏற்பட்ட வெடிப்பை “நாட்டை உலுக்கிய பூகம்பத்துடன்” ஒப்பிட்ட டயப். “நாங்கள் மக்களுடன் நிற்க முடிவு செய்துள்ளோம்,” என்று கூறினார்.

“இந்த அரசாங்கத்தின் ராஜினாமாவை நான் இன்று அறிவிக்கிறேன். கடவுள் லெபனானைப் பாதுகாக்கட்டும்” என்று மூன்று முறை கூறி உரையை முடித்தார்.

பாராளுமன்றத்தின் ஏழு உறுப்பினர்களுடன் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் ஏற்கனவே பதவி விலகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


— இளவரசி இளங்கோவன்,
கனடா

Leave a Reply