Home>>அரசியல்>>அமெரிக்க எச்-1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு விதிகள் தளர்வு – டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
அரசியல்உலகம்செய்திகள்

அமெரிக்க எச்-1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு விதிகள் தளர்வு – டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு

இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே அதிகம் விரும்பப்படும் எச்-1 பி விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத மக்களுக்கான விசாவாகும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை சிறப்புத் தொழில்களில் வேலை செய்ய அனுமதிக்கிறது.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா பிரிவுகளான எச்-1 பி மற்றும் எல் 1 விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்திவைத்து டிரம்ப் ஜூன் 22 அன்று ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

பொதுவாக H-1B அல்லது L-1 பயணத் தடை என குறிப்பிடப்படும் ஜூன் 22 ஜனாதிபதி பிரகடனம் 10052 க்கான விலக்குகளில், H-1B, L-1 மற்றும் சில வகை J1 விசாக்களின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் சுகாதாரத் துறையில் பணியாற்றுவோருக்கும் உதவக்கூடிய ஒரு நடவடிக்கையில், அதே முதலாளியுடன் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு எச்-1 பி மற்றும் எல்-1 பயணத் தடைகளில் சில விலக்குகளை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எச்-1 பி விசா வைத்திருப்பவர்களுக்கு விசா தடை அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த அதே வேலைகளுக்குத் திரும்பினால் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் சில விதிகளை தளர்த்தியு தடைக்கு முந்தைய வேலைகளுக்கு திரும்ப அனுமதிக்கிறது.

முதன்மை விசா வைத்திருப்பவர்களுடன் தங்கியிருப்பவர்களும் (வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகள்) பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

“அமெரிக்காவில் தொடர்ந்து வேலைவாய்ப்பை அதே முதலாளி மற்றும் விசா வகைப்பாட்டுடன் மீண்டும் தொடங்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் பயணம் அனுமதிக்கப்படும்” என்று வெளியுறவுத்துறை ஆலோசகர் கூறினார்.

மேலும் “தொழில்நுட்ப வல்லுநர்கள், மூத்த-நிலை மேலாளர்கள் மற்றும் எச்-1 பி விசாக்களை வைத்திருக்கும் பிற தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பயணங்கள் அமெரிக்காவின் உடனடி மற்றும் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கு நிர்வாகம் அனுமதிக்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்குள் ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட இந்தியர்களுக்ககான தளர்வு விதி என்பதும் குறிப்பிடத்தக்கது.


– இளவரசி இளங்கோவன்,
கனடா

Leave a Reply